குட் பேட் அக்லி பட நடிகர் எடுதத ஓட்டம்.. துரத்தி பிடிக்கும் போலீஸ்.. விடிய விடிய போதை
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகராக வலம் வரும் பிரபல நடிகர் ஒருவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரது வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், போலீசிடம் இருந்து இவர் தப்பி செல்லும் வீடியோ வெளியாகி பரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர், தமிழ், தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். தெலுங்கில் தசரா படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். அதேபோன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில், எர்ணாகுளத்தில் போதை பொருள் தொடர்பாக தனியார் தங்கும் விடுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பியோடியதாகக் கூறப்படுகிறு. இதேபோன்று முன்பு ஒரு வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ஷைன் டாம் சாக்கோ கைது: கடந்த 2015ஆம் ஆண்டு ஜன.30ஆம் தேதி கொச்சி காவல்துறையினர் கடவந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடத்திய சோதனையில் கொகைன் பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவருடன் இருந்த உதவி இயக்குநர் பிளெஸி, 3 இளம் மாடல் அழகிகளை கைது செய்தனர். அப்போது போலீசார் 10 கிராம் கொக்கைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. காலின்ஸ், பிரித்விராஜ், ஜஸ்பீர் சிங் ஆகிய மூவரும் ரேஷ்மாவுக்கும் , ப்ளெஸ்ஸிக்கும் போதைப்பொருள்களை விற்றதாகக் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் 2 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அதன்பின், 2015, மார்ச் மாதம் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
நடிகர் தப்பியோட்டம்: கடந்த 2015-ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கின் விசாரணை சுமார் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், மேற்கண்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால், அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், எர்ணாகுளத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போதை பொருள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு சோதனையிட போலீசார் சென்றனர். போலீசாரின் சோதனையை அறிந்து கொண்ட ஷைன் டாம் சாக்கோ தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தப்பி செல்லும் சிசிடிவி காட்சியும் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் விசாரணை: அந்த வீடியோவில் இருப்பது ஷைன் டாம் சாக்கோ என உறுதி செய்யப்பட்டால் விரைவில் எர்ணாகுளம் போலீசாரால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும், முன்னதாக போதை பொருள் விவகாரத்தில் சிக்கி பின்னர் விடுவிக்கப்பட்ட நடிகர் மீண்டும் போதை பொருளில் சிக்கியிருப்பது மலையாள திரையுலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. முன்னதாக நடிகை ஒருவர் கஞ்சா வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது. மேலும், மலையாள திரையுலகில் போதை பொருள் ஆட்டிப்படைப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











