என்ன விஷயம்னு தெரியலையே.. இன்னொரு மலையாள நடிகரும் தளபதி 65ல இணைகிறாராம்.. பரபரக்கும் கோலிவுட்!

சென்னை: தளபதி 65 படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ இணைவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சனுக்கு அடுத்ததாக தளபதி 65 படத்தை இயக்கும் ஜாக்பாட் அடித்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

தளபதி 65

தளபதி 65

சன் ஸ்டூடியோவில் தளபதி 65 படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு அதகளமாக ஆரம்பமானது. ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படமும் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

விஜய்க்கு ஜோடி

விஜய்க்கு ஜோடி

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வருகிறார். இந்நிலையில், தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மீண்டும் கோலிவுட்டில் கால் தடம் பதிக்கிறார். விரைவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகை

மலையாள நடிகை

பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மலையாள நடிகையான அபர்ணா தாஸும் தளபதி 65 படத்தில் இணைந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பட பூஜையின் போது கலந்து கொண்ட அபர்ணா தாஸ் பற்றிய தேடல்கள் தான் சமூக வலைதளத்தில் அதிகமாக இருந்தன. அவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புதிய போட்டோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

Thalapathy Fans அசத்தும் உதவி | Free Oxygen Cylinder, Mask | Thalapathy Vijay
கேஜிஎஃப் ஸ்டைலில்

கேஜிஎஃப் ஸ்டைலில்

கேஜிஎஃப் படத்தில் வரும் பிரம்மாண்ட சண்டை காட்சிகளை விட தளபதி 65 படத்தின் சண்டை காட்சிகள் இருக்கும் என தளபதி 65 படத்தின் சண்டை இயக்குநர்களான அன்பு மற்றும் அறிவு இணைந்து பேட்டி ஒன்றில் கூறியது விஜய் ரசிகர்களை வெறித்தனமான எதிர்பார்ப்புக்கு தள்ளி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கான் ஏஜென்ட்டாக ஸ்னைபர் துப்பாக்கிகளில் எல்லாம் விஜய் விளையாட உள்ளார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

ஷைன் டாம் சாக்கோ

ஷைன் டாம் சாக்கோ

இந்நிலையில், தற்போது தளபதி 65 படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணையவுள்ளதாக தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. 2010ம் ஆண்டு வெளியான ஆத்மகதா படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2011ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வேங்கை படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தான் வில்லனா

இவர் தான் வில்லனா

தளபதி 65 படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மலையாள நடிகையான அபர்ணா தாஸ் நடித்து வரும் நிலையில், இன்னொரு மலையாள நடிகர் இணைந்துள்ளது படத்தின் கதை எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. ஆனால், சன் பிக்சர்ஸ் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

ஷாப்பிங் மால்

ஷாப்பிங் மால்

முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த சென்னையில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட்டை படக்குழு போட்டு வருவதாகவும், இரண்டாவது ஷெட்யூல் சீக்கிரமே ஆரம்பமாகும் என்கிற தகவலும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X