மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி..அடுத்ததாக சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்ற நடிகர்!
கொச்சி: கேரளாவில் நடிகைகளுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாக ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த விஷயத்தில் நடிகைகள் பலரும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டில் தன்னை நடிகர் சித்திக் திருவனந்தபுரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் புகார் கொடுததிருந்தார்.
நடிகை கொடுத்த புகாரையடுத்து நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தன்மீதான கைது நடவடிக்கையை தவிர்க்கும்வகையில் கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகர் சித்திக் முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கை: மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை மலையாளத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அதிகமான சர்ச்சைகளையும் நடிகைகளின் பல பாலியல் குற்றச்சாட்டுகளையும் வெளிக்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த அறிக்கையை தொடர்ந்து மலையாள திரையுலகில் பிரபலங்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தன்னை வரவழைத்த நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாக நடிகை ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.
ஹேமா கமிட்டி அறிக்கை: மலையாளத் திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை மலையாளத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் அதிகமான சர்ச்சைகளையும் நடிகைகளின் பல பாலியல் குற்றச்சாட்டுகளையும் வெளிக்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த அறிக்கையை தொடர்ந்து மலையாள திரையுலகில் பிரபலங்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தன்னை வரவழைத்த நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.
சித்திக் மீது வழக்கு: இந்த சம்பவம் தொடர்பாக மலையாள நடிகர் சித்திக் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் சித்திக்கை கைது செய்வார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் விலகினார். இந்நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவரது முன் ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் இன்றைய தினம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி: இந்த வழக்கில் சித்திக்கின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது கைது குறித்து விரைவில் தெரியவரும். இதனிடையே இந்த வழக்கில் அவர் அடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் சித்திக்கிற்கு எதிரான பல ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழுவின்ர் சேகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சம்பவ நாளில் சித்திக் மற்றும் பாலியல் புகாரை பதிவிட்டுள்ள நடிகை இருவரும் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் இருந்ததற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.
வெளிவரும் அடுத்தடுத்த சம்பவங்கள்: மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான நிலையில் அடுத்தடுத்து இதுவரை 23 வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர். இதில் சித்திக் மீதான குற்றச்சாட்டும் ஒன்று. இத்தகைய விவகாரங்கள் ஏன் குற்றம் நடந்த காலகட்டத்திலேயே வெளியாகவில்லை என்ற கேள்வி அடுத்தடுத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் உள்ளிட்டவர்களின் அதிகாரம் மற்றும் அரசியல் பின்புலம் காரணமாக இவை அப்படியே அமுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை கொடுத்த தைரியத்தில் அடுத்தடுத்து நடிகைகள் இநத் விஷயங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











