ஷூட்டிங்கில் அனு சித்தாராவை ஓங்கி அறைந்த மலையாள நடிகர்!
Recommended Video

கொச்சின் : மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் 'கேப்டன்' என்கிற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்தப்படம் கேரளாவின் மறைந்த முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கியபோது ஜெயசூர்யா, கதாநாயகியாக நடித்த அனு சித்தாராவை நிஜமாகவே பலமாக அறைந்து விட்டாராம்.

ஜெயசூர்யா
கேரளாவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'கேப்டன்' படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சத்யன் கேரக்டரில் கேப்டனாக ஜெயசூர்யா நடித்துள்ளார்.

அனு சித்தாராவை அறைந்த ஜெயசூர்யா
இந்தப்படத்தில் நடித்தது குறித்து சில தகவல்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார் ஜெயசூர்யா. இந்தப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கியபோது, கதையின் நாயகன் வி.பி.சத்யனாகவே மாறிவிட்ட ஜெயசூர்யா, கதாநாயகியாக நடித்த அனு சித்தாராவை பலமாக அறைந்து விட்டாராம்.

சமாதானம் செய்த அனு சித்தாரா
காட்சி நன்றாக படமானாலும், ஒரு பெண்ணை அறைந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியால் தொடர்ந்து அனு சித்தாராவின் முகம் பார்த்து பேசவே வெட்கப்பட்டாரம் ஜெயசூர்யா. ஆனால் அனு சித்தாரவோ, நீங்கள் செய்தது வெறும் நடிப்புக்காகத்தானே என சமாதானப்படுத்தியதும் தான் இயல்பாக பேச ஆரம்பித்தாராம்.

அடுத்த படம்
மலையாள நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் உருவான 'கேப்டன் இம்மாதம் 16-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனது ஆஸ்தான இயக்குநர் ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் 'ஞான் மேரிக்குட்டி' படத்தில் நடித்து வருகிறார் ஜெயசூர்யா.


Click it and Unblock the Notifications











