சே, இப்படியா நடந்துக்கொள்வார்?..போலீஸாக நடித்து பிரபலமான மலையாள நடிகர்..போக்சோவில் தூக்கியது போலீஸ்!

திருவனந்தபுரம் : நடிகர் ஸ்ரீஜித் ரவி, தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருபவர்.

இவர் கடந்த 2016ல் 14 பள்ளி மாணவிகளின் முன்பு அநாகரிகமாக நடந்துக் கொண்டதாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது இரண்டு மைனர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி

மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி

நடிகர் ஸ்ரீஜித் கடந்த 2005ல் வெளியான மயூகம் என்ற மலையாளப் படம் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர். இதையடுத்து அதே ஆண்டில் வெளியான சாந்துப்பொட்டு என்ற மிகப்பெரிய ஹிட் படத்திலும் இவர் நடித்துள்ளார். மிஷன் 90 டேஸ், புன்யாலன் அகர்பத்தீஸ் அண்ட் புன்யாலன் பிரைவேட் லிமிடெட் போன்ற ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தமிழிலும் படங்கள்

தமிழிலும் படங்கள்

தொடர்ந்து பல கேரக்டர்களில் நடித்துவந்த இவர் தமிழிலும் வேட்டை, கும்கி, மதயானைக்கூட்டம், கதகளி மற்றும் அசுரவதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கொடூரமான வில்லன் கேரக்டர்களில் இவர் சிறப்பான நடித்து பெயர் பெற்று வந்தார். தமிழில் இவர் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் சிறப்பான பெயரை பெற்றுள்ளார்.

மைனர் பெண்களிடம் அத்துமீறல்

மைனர் பெண்களிடம் அத்துமீறல்

இவர் தற்போது இரண்டு மைனர் பெண்களிடம் பாலியல் அத்துமீறியதாக கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ம் தேதி திரிச்சூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்ரீஜித் காரில் இருந்தநிலையில், அந்த வழியாக வந்த இரண்டு மைனர் பெண்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போக்சோ சட்டத்தில் கைது

போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அவருக்கு புதிதானதல்ல. கடந்த 2016ல் இதேபோல ஒரு படத்தின் சூட்டிங்கின்போது, அந்த வழியாக வந்த 14 பள்ளி மாணவிகள் முன்பு அவர் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

2016லும் இதே காரணத்திற்காக கைது

2016லும் இதே காரணத்திற்காக கைது

அந்தப் பள்ளி மாணவிகளின் தலைமை ஆசிரியர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனிலும் வெளிவந்தார். இதையடுத்து இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகவும் போலீசார் இந்த வழக்கில் போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும் அந்த மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X