Sreenivasan Death: பழம்பெரும் மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உயிரிழந்தார்.. சோகத்தில் திரைத்துறை!
சென்னை: நடிகர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் தன் ஆழமான முத்திரையைப் பதித்த மலையாள திரையுலகின் மூத்த கலைஞர் ஸ்ரீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 69. அவரது மறைவு மலையாள திரைத்துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மலையாள சினிமாவின் நகைச்சுவையும் கலந்த தனித்துவமான படைப்புகளால் உயர்ந்து நிற்கும் கலைஞராக இருந்தார். இவர் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ள பாட்டியத்தில் பிறந்தார். இவருக்கு சினிமா மீது ஈடுபாடு இருந்ததால், சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்படத்துறையில் படித்தார். இதையடுத்து, 1976 ஆம் ஆண்டு பி.ஏ. பேக்கரின் 'மணிமுழக்கம்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். அதைத் தொடர்ந்து, 1979 ஆம் ஆண்டு வெளியான 'சங்ககானம்' படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன்: அதைத்தொடர்ந்து, 'ஒடாருதம்மாவா அலரியம்', 'சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்', 'காந்திநகர் 2வது தெரு', 'நாடோடிக்காட்டு', 'பட்டணபிரவேசம்', 'வரவேள்பு', 'தலையணை மந்திரம்', 'சண்டேசம்', 'மிதுனம்', 'மழையேதும் முன்பே', 'அழகிய ராவணன்', 'ஒரு மறவத்தூர் கனவு', 'உதயணனு தாரம்', 'கதா பரயும்போல்', 'நான் பிரகாஷனும்' உள்ளிட்ட படங்களில் அவரின் புத்திசாலித்தனமான வசனங்கள், அரசியல் நுண்ணறிவு ஆகிய காரணங்களால் அவரது திரைக்கதைகள் பாராட்டை பெற்றன.
பல விருதுகளை பெற்றுள்ளார்: திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஸ்ரீனிவாசன் முக்கியமான சாதனைகளைப் புரிந்துள்ளார். அவர் எழுதி இயக்கிய 'வடக்குநோக்கியந்திரம்' சிறந்த திரைப்படத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றது. அதேபோல் 'சிந்தவிஷ்டயாய ஷ்யாமளா' திரைப்படம் தேசிய திரைப்பட விருதை வென்றதுடன், சமூகப் பிரச்சினைகளை முன்வைத்த சிறந்த திரைப்படம் என்ற அங்கீகாரத்தையும் கேரள மாநில திரைப்பட விருதை பெற்றது. அவை மட்டுமில்லாமல் தேசிய விருது, இரண்டு தென் பிலிம்பேர் விருதுகள், ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பிரபலங்கள் இரங்கல்: மலையாள சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக இருந்த இவர், 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, அன்று தனது 69வது வயதில் காலமானார். தகவல்களின்படி, அவர் நீண்டகால நோய்க்காக தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை. அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் திருப்புனித்துரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு விமலா என்கிற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். வினீத ஸ்ரீனிவாசன், தியான் ஸ்ரீனிவாசன் இருவருமே பாடகர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளார்


Click it and Unblock the Notifications











