லேசா லேசா பட நடிகர் ஸ்ரீநிவாசன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
அங்கமாலி : மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ஸ்ரீநிவாசன். இவர் படங்களை இயக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குணச்சித்திர நடிகர் ஸ்ரீநிவாசன்
மலையாளத்தில் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநிவாசன். தமிழில் ஷாம் நடிப்பில் வெளியான லேசா லேசா படத்தில் இவர் நடித்திருப்பார். 70களில் தொடங்கிய இவரது நடிப்புப் பயணம் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்தார்.

மருத்துவமனையில் ஸ்ரீநிவாசன்
இந்நிலையில் கடந்த 30ம் தேதி இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீநிவாசன் கவலைக்கிடம்
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவரது உடல்நிலை தேற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பைபாஸ் அறுவை சிகிச்சை
கடந்த வாரத்திலேயே இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேஷன் வழங்கப்பட்ட நிலையில், நிலைமை தேறி அதிலிருந்து வெளியேறி வந்தார். ஆனால் இரு தினங்களிலேயே இவருக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு தற்போது மீண்டும் வெண்டிலேஷன் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநிவாசனின் இயல்பான நடிப்பு
தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ஸ்ரீநிவாசன். தொடர்ந்து ஏறக்குறைய 50 ஆண்டுகளாக இவர் நடித்துவரும் நிலையில், சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் இவரது உடல்நிலை விரைவில் தேற சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சக நடிகர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











