விபத்தில் சிக்கிய டோவினோ தாமஸ்... காலில் பயங்கர காயம்.. நடந்தது என்ன?
கேரளா: பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் படப்பிடிப்பின் விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் டோவினோ தாமஸ் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான மாயா நதி, மின்னல் முரளி, தள்ளுமாலா, 2018 முதலிய படங்கள் மலையாள ரசிகர்கள் தாண்டி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
டோவினோ தாமஸ்: மலையாள திரையுலகில் முன்னணி நடிகர் என பெயர் எடுத்த டோவினோ தாமஸ், தனுஷ் , சாய் பல்லவி நடித்த மாரி 2 வில்லனாக நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். மாரி 2 படத்திற்கு பின் இவருக்கு என்று கோலிவுட்டிலும் தனி ரசிகர்கள் உருவாகினார்கள். நடிகராக வெற்றி பெற்ற டோவினோ , 2020 ஆம் ஆண்டில், கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார், அதில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
காலில் காயம்: அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் டோவினோ தாமஸ் லால் ஜூனியர் இயக்கத்தில் உருவாகி வரும் 'நடிகர் திலகம் படத்தில் நடித்து வருகிறார். பெரும்பாவூர் அருகே மாரம்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் அவரை இரண்டு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
இரண்டு வாரம் ஓய்வு: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லால் ஜூனியர், டோவினோ தாமசுக்கு காலில் லேசாக காயம் ஏற்பட்டுள்ளது. இவர் இரண்டு வாரம் ஓய்வில் இருப்பார். இதனால், நடிகர் திலகம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்படுகிறது. இவர், குணமடைந்த பின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார்.
முன்னணி நடிகர்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில், தியான் ஸ்ரீனிவாசன், அனூப் மேனன், ஷைன் டாம் சாக்கோ, அஜு வர்கீஸ், ஸ்ரீநாத் பாசி, லால், பாவனா, வர்கீஸ், சுரேஷ் கிருஷ்ணா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை பாவனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











