மீ டூனா என்ன?.. நான் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்.. பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு !
கேரளா : பிரபல நடிகர், நான் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மலையாளத் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகம். இவர் விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் காலை நொண்டி நொண்டி படம் முழுக்க நடித்து இருப்பார்.
தனுஷூன் மரியான், சிறுத்தை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரத்திலே இவர் நடித்து பெயர் எடுத்துள்ளார்.

நடிகர் விநாயகம்
மலையாள நடிகர் விநாயகம், தற்போது ஒருத்தி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விநாயகத்திடம் செய்தியாளர் ஒருவர், மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பதிலளித்த விநாயகம், முதலில் மீ டூனா என்ன எனக்கு புரியவில்லை, ஒரு பெண்ணை கட்டாயப்படத்தி உறவு வைத்துக்கொள்வதா? எனக்கேட்டுள்ளார்.

பலருடன் உறவு
எனக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டது என்றால், அந்த பெண்ணிடம் பேசி நேரடியாக போய் உறவுகொள்ள விருப்பமா என்று கேட்பேன். அந்த பெண்ணுக்கு பிடித்து இருந்தால் ஒகே என்று என்னுடன் வருவாள், இப்படி நான் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என்று செய்தியாளர்களிடம் பேசினார். இவரின் பதில் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பலரும் கண்டனம்
விநாயகனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை, நடிகர் ஹரிஷ் பெராடி, குஞ்சிலா மாசில்லாமணி, ஷரதாக் குட்டி, ஷானிமோல் உஸ்மான் உட்பட பல நடிகர், நடிகைகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் கேரளாவில் உள்ள பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அவமானம்
நடிகை பார்வதி திருவோத்து, விநாயகனின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து, அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பை, 'அவமானம்' என்று பதவிட்டுள்ளார். 2019ம் ஆண்டு பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்களை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக கைது செய்து செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











