பெண்களை பற்றி வில்லன் நடிகர் சர்ச்சை பேச்சு.. கடைசியில் பகிரங்க மன்னிப்பு கேட்டு பேஸ்புக் போஸ்ட் !!

கேரளா : பெண்கள் குறித்து தவறாக பேசிவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று இணையத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டார் வில்லன் நடிகர்.

மலையாளத் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன் . இவர் விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் காலை நொண்டி நொண்டி படம் முழுக்க நடித்து இருப்பார்.

தனுஷின் மரியான், சிறுத்தை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பலத்திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலே இவர் நடித்து பெயர் எடுத்துள்ளார்.

நடிகர் விநாயகன்

நடிகர் விநாயகன்

மலையாள நடிகர் விநாயகன், ஒருத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர், கேரளாவில் நடக்கும் மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விநாயகன், முதலில் மீ டூனா என்ன, ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொள்வதா? என கேட்டுவிட்டு, நான் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருக்கிறேன் என்று கூறினார்.

மோசமான பேச்சு

மோசமான பேச்சு

விநாயகனின் இந்தப் பேச்சு பலரை முகம் சுளிக்க வைத்தது மட்டும் இல்லாமல், மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் இந்த பேச்சை பல நடிகர், நடிகைகள் கடுமையாக விமர்சித்தனர். கேரளாவில் உள்ள பல பெண் அமைப்பினர் விநாயகன் பேச்சு பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது என்றும். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இணையத்தில் அவருக்கு எதிராக பல கண்டன குரல்கள் பதிவாகின.

மன்னித்துவிடுங்கள்

மன்னித்துவிடுங்கள்

இந்நிலையில், நடிகர் விநாயகன் தனது ஃபேஸ்புக் பதிவில், ஒருத்தி பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக, அதன் தீவிரம் உணராமல் சில கருத்துகளைத் தெரிவித்துவிட்டேன். அதுதொடர்பாக ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மகளிர் ஆணையத்தில் புகார்

மகளிர் ஆணையத்தில் புகார்

இணையத்தில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிறகும், மீ டு இயக்கத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி, விநாயகன் மீது மாநில மகளிர் ஆணையத்தில், ஓபிசி மோர்ச்சா என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X