“எனக்கு மட்டுமல்ல.. என் அம்மாவுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்”.. திமிரு வில்லன் மீது மீடூ புகார்

மலையாள வில்லன் நடிகர் விநாயகன் மீது மீடூ புகார் கூறப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரான விநாயகன் மீது சமூக ஆர்வலர் மிருதுளா தேவி என்பவர் மீடூ புகார் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பிரபலமானவர் நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். தமிழில் இவர் விஷாலின் திமிரு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Malayalam Actor Vinayakan Slammed for Making Sexist Remarks

சமீபத்தில் இவர் பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். அதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் அவரது நிறம் மற்றும் சாதிய ரீதியாக தாக்குதலுக்கு ஆளானார்.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர், தற்போது அவர் மீது மீடூ புகார் தெரிவித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அழைத்த போது, போனில் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். அப்போது, 'என்னை மட்டுமல்லாது என்னுடைய தாயையும் அவர் விரும்பும்படி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என விநாயகன் பேசியதாக மிருதுளா கூறியுள்ளார்.

விநாயகன் மீது மீடூ புகார் கூறுவது ஒருபுறம் இருந்தாலும், அவர் மீதான சாதிய, நிறவெறி தாக்குதல் குறித்து தனது கண்டனங்களையும் மிருதுளா தேவி பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: me too மீ டூ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X