லாக்டவுனால்.. நடிகர், நடிகைகள் சம்பளத்தைப் பாதியாகக் குறைக்க முடிவு.. 'அம்மா' கூட்டத்தில் முடிவு
கொச்சி: நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைப் பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. ஏற்கனவே திரைக்கு வர தயாராக இருந்த முன்னணி நடிகர்களின் படங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
லாக்டவுன் முடிந்த பிறகும் திரையரங்குகளில் படம் பார்க்க கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

விஜய் ஆண்டனி
இந்நிலையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சினிமா உலகில் கடந்த சில மாதங்களாக எழுந்துள்ளது. தமிழில் விஜய் ஆண்டனி உட்பட சில நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைப்பதாக அறிவித்தனர். ஆனால், முன்னணி ஹீரோக்கள் அதுபற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.

நடிகர்-நடிகைகள்
இந்நிலையில் மலையாள ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளனர். மற்ற மொழிகளைப் போல மலையாளத்திலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட படங்கள், லாக்டவுனால் முடங்கி உள்ளன. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார், கொரோனா பாதிப்பில் இருந்து திரையுலகம் எப்போது மீளும் என்று தெரியவில்லை. இதனால் நடிகர்-நடிகைகள் சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும்' என்று கூறியிருந்தார்.

குறைக்க வேண்டும்
இதையே மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் அறிவித்தது. நடிகர், நடிகைகள் கண்டிப்பாக தங்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்றும் இப்போதைக்கு படப்பிடிப்புகளைத் தொடங்கமாட்டோம் என்றும் கூறியது. இதற்கு மலையாள நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. தங்களிடம் ஆலோசிக்காமல் தனிச்சையாக சம்பள குறைப்பு மற்றும் படப்பிடிப்பு பிரச்னை பற்றி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது முறையானதல்ல என்று கூறியிருந்தது.
Recommended Video

நிர்வாகக் குழு
இந்நிலையில், மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) நிர்வாகக் குழு கூட்டம் கொச்சியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. இதில், நடிகர் மோகன்லால், சங்கத்தின் பொதுச்செயலாளர் இடைவேளை பாபு, துணைத்தலைவர்கள் முகேஷ், கணேஷ், நடிகர்கள் சித்திக், ஆசிப் அலி, நடிகை ரக்ஷனா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தை 50 சதவிகிதம் குறைப்பது என்று தீர்மானித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











