நயன்தாரா சம்பளத்தைவிட மலையாள நடிகர்கள் வாங்குவது கம்மி தான்: திரிஷா பட நடிகர் பரபரப்பு பேச்சு

மலையாள நடிகர்கள், நயன்தாராவைவிட குறைவாக சம்பளம் வாங்குவதாக நடிகர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: நயன்தாரா போன்று இங்கு எத்தனை பேருக்கு சம்பளம் கிடைக்கிறது என மலையாள நடிகர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையாளத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான சீனிவாசன். லேசா லேசா, புள்ளக்குட்டிகாரன் உள்பட தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

Malayalam actors get less salary than Nayanthara, says actor Sreenivasan

சமீபத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட சீனிவாசன், எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், மலையாள நடிகர்கள், நயன்தாராவைவிட குறைவாக சம்பளம் வாங்குவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "நடிகர்களை விட நடிகைகளுக்கு சம்பளம் குறைவு என்று பேசப்படுகிறது. கதாநாயகர்களுக்கும் பிற நடிகர்களுக்கும் நடிகைகளைவிட அதிக சம்பளம் கொடுப்பதாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இங்கு நயன்தாரா அளவுக்கு எத்தனை நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். மார்க்கெட்டை வைத்தே நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்றனர்.

சினிமாவில் பெண்கள் சுரண்டப்படுவதாக சொல்வது சரியல்ல. நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கி இருக்கிறார். இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. நடிகையை கடத்த பல்சர் சுனிலுக்கு திலீப் ரூ.1.5 கோடி கொடுத்ததாக சொல்கிறார்கள். இதை நம்பமுடியாது. திலீப் அதற்காக ரூ.1.5 பைசா கூட செலவழித்து இருக்க மாட்டார்", என சீனிவாசன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X