மலையாள நடிகர்கள் பிரபாஸை பார்த்து கத்துக்கணும்: கேரள அமைச்சர் விளாசல்
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் பிரபாஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகினர் நிதியுதவி அளித்துள்ளனர்.
பாகுபலி புகழ் பிரபாஸ் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

கார்த்தி
கேரளாவில் வெள்ளம் என்றதும் முதல் ஆளாக உதவிய சினிமா பிரபலங்கள் என்றால் அது சூர்யாவும், அவரின் தம்பி கார்த்தியும் தான். அவர்கள் இருவரும் சேர்ந்து ரூ. 25 லட்சம் நிதி அளித்தனர். அதன் பிறகு விக்ரம், விஜய், விஷால், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் என்று பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள்.

விளாசல்
லட்சங்களில் நிதியுதவி அளித்துள்ள மலையாள திரையுலகினரை கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விளாசியுள்ளார். நம் மாநிலத்தில் சிறந்த நடிகர்கள் உள்ளனர். அவர்கள் படம் ஒன்றுக்கு ரூ. 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். குறைந்தபட்சம் ரூ. 3 கோடி வாங்கும் நடிகர்கள் நம் மாநிலத்தில் உள்ளனர் என்கிறார் சுரேந்திரன்.

ரோல் மாடல்
கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் மலையாள நடிகர்கள் ஆந்திராவை சேர்ந்த நடிகர் பிரபாஸிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நம் மாநிலத்தில் ஏற்பட்ட துயரம் குறித்து அறிந்த பிரபாஸ் சற்றும் யோசிக்காமல் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார் என்றார் சுரேந்திரன். பிரபாஸ் ரூ. 25 லட்சம் கொடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் அமைச்சர் இப்படி பேசியுள்ளார். பிரபாஸ் எவ்வளவு கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஷீலா
முன்னதாக சீனியர் நடிகை ஷீலாவும் மலையாள நடிகர்களை விளாசினார். ரூ. 4 கோடிக்கு கார் வைத்திருக்கும் நடிகர்கள் சில லட்சங்கள் மட்டுமே நிதியுதவி அளித்துள்ளனர். வளர்த்துவிட்டு அழகு பார்க்கும் ரசிகர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்வது நம் கடமை என்று தெரிவித்தார் ஷீலா. கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஷீலா ரூ. 5 லட்சம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











