பத்து தல படப்பிடிப்பு தள வீடியோ..சிம்பு கையில் இருக்கும் குழந்தை யார்?

சென்னை : சிம்பு நடித்து வரும் பத்து தல படப்பிடிப்பு தள போட்டோ தீயாக பரவி வரும் நிலையில், சிம்பு கையில் இருக்கும் குழந்தை யார்? என்ன ரோல் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Recommended Video

STR |POSITIVITY நிறைய தெரியுது ! Simbu Super Emotional Speech | Paper Rocket Trailer| *Launch

திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

மூன்றாவது முறையாக சிலம்பரசன், இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி உள்ளது.

மாநாடு

மாநாடு

ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கைகொடுத்தது. இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி பழைய சிம்புவாக காட்சியளித்தார். அப்படத்தின் வெற்றி சிம்புவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. அதைத்தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு.

பத்து தல

பத்து தல

இதையடுத்து, ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் ஒபெலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பத்து தல .கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் பத்து தல.

டிசம்பரில் ரிலீஸ்

டிசம்பரில் ரிலீஸ்

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். வருகிற டிசம்பர் 14-ம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை யார்?

குழந்தை யார்?

பத்து தல திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பத்து தல திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை அனு சித்தாரா பத்து தல ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. அந்த வீடியோவில் சிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? அந்த குழந்தை என்ன ரோலில் நடிக்கிறது என ரசிகர்கள் இணையத்தில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X