யாரு அந்த மஞ்ச கலரு சுடிதார்.. தளபதி பக்கத்துல நிக்கிறாங்க.. அப்போ 2வது ஹீரோயின் அவங்க இல்லையா?

சென்னை: தளபதி 65 படத்தின் பூஜை இன்று எளிமையான முறையில் போடப்பட்டது. நடிகர் விஜய் படக்குழுவினருடன் இணைந்து நிற்கும் குரூப் போட்டோவில் ரசிகர்களை ஜூம் செய்து பார்க்க வைத்த அந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண் தான் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளார்.

நாயகி பூஜா ஹெக்டே பூஜையில் கலந்து கொள்ளாத நிலையில், தளபதி 65 பூஜையை மங்களகரமாக மாக்கிய அவர் யார் என்று ஜூம் செய்து பார்த்தால் பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ் தான்.

மேலும், தளபதி 65 படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் ட்வீட் செய்துள்ளார் அபர்ணா தாஸ்.

டிரெண்டாகும் பூஜை

டிரெண்டாகும் பூஜை

தளபதி 65 படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ள நிலையில், தளபதி 65 பூஜை போட்டோக்களை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர். புது லுக்கில் இருக்கும் தளபதி விஜய்யின் போட்டோக்கள் காட்டுத் தீ போல ஷேர் செய்யப்பட்டும் ரீ ட்வீட்டும் செய்யப்பட்டும் இணையத்தை கலக்கி வருகிறது.

கவின் இருக்காரா?

கவின் இருக்காரா?

தளபதி 65 படத்தின் பூஜையில் நடிகர் கவின் கலந்து கொண்ட போட்டோக்கள் வெளியான நிலையில், #kavin ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தளபதி 65 படத்தில் கவின் நடிக்கிறார் என்றும், நடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிகாரப்பூர்வமாக படக்குழு இதுவரை அது தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்ச கலரு சுடிதார்

மஞ்ச கலரு சுடிதார்

தளபதி 65 படத்தின் பூஜை போட்டோக்களில் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து கொண்டு மங்களகரமாக பூஜையை அலங்கரித்துள்ள அந்த பெண் யார் என்கிற தேடலில் ரசிகர்கள் இறங்கி உள்ளனர். தளபதி விஜய், நடிகர் கவினை தொடர்ந்து அந்த பெண் மீது தான் பலரது கவனமும் சென்றுள்ளது. தளபதி விஜய்க்கு அருகே நிற்கும் அந்த மஞ்ச கலரு சுடிதார் மலையாள நடிகை அபர்ணா தாஸ் தான்.

நானும் இருக்கேன்

நானும் இருக்கேன்

தளபதி 65 படத்தில் நானும் இணைந்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகை அபர்ணா தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தளபதி 65 படத்தின் பூஜை போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். நியான் பிரகாஷன் மற்றும் மனோஹரம் உள்ளிட்ட மலையாள படங்களில் இவர் நடித்துள்ளார்.

ராஷ்மிகா இல்லையா

ராஷ்மிகா இல்லையா

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தில் இன்னொரு ஹீரோயினுக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மலையாள திரையுலகின் இளம் நடிகை அபர்ணா தாஸ் இணைந்துள்ளதால் ராஷ்மிகா இணைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X