வீட்ல விசேஷம் பட பாணியில் சீரியல் நடிகை வீட்டில் வாரிசு... 23 வயது நடிகைக்கு குட்டி தங்கை!

திருவனந்தபுரம்: ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த வீட்ல விசேஷம் திரைப்படம் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியானது.

ஆர்ஜே பாலாஜியுடன் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் திருமணமாகும் வயதில் ஆர்ஜே பாலாஜி இருக்கும் போது அவரது அம்மாவாக நடித்த ஊர்வசி குழந்தை பெற்றெடுப்பார்.

காமெடி ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே பாணியில் ரியலான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

 வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியான வீட்ல விசேஷம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தியில் சூப்பர் ஹிட்டான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்காக இது வெளியானது. ஆர்ஜே பாலாஜியுடன் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஆர்ஜே பாலாஜியும் அபர்ணா பாலமுரளியும் ஒருவரையொருவர் காதலித்து வருவார்கள். ஆனால், அப்போது ஆர்ஜே பாலாஜியின் அம்மா ஊர்வசி கர்ப்பமாவதும், குழந்தை பெற்றுக்கொள்வதும் தான் கதை.

 காமெடி விசேஷம்

காமெடி விசேஷம்

சத்யராஜ் - ஊர்வசி ஜோடிக்கு குழந்தை பிறப்பதன் பின்னணியில் உருவான இந்தப் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. திருமண வயதில் தான் இருக்கும் போது வீட்டில் இப்படி நடக்கிறதே என ஆர்ஜே பாலாஜி புலம்பி தவிக்கும் காட்சிகள் ரசனையாக இருக்கும். அதேபோல், ஊர்வசி கர்ப்பமானதை சத்யராஜ் அனைவரிடமும் சொல்லும் காட்சியும் ரகளையாக இருக்கும்.

 உண்மைச் சம்பவம்

உண்மைச் சம்பவம்

தற்போது வீட்ல விசேஷம் பட பாணியில் சீரியல் நடிகை வீட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இதுமாதிரியான நிகழ்வுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பரவலாக காணப்பட்டன. கிராமங்களில் அம்மாவும் மகளும் கர்ப்பமாக இருந்த கதைகள் எல்லாம் நடந்ததுண்டு. இந்நிலையில், மலையாள சீரியல் நடிகை ஆர்யா பார்வதியின் அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 நடிகையின் மகிழ்ச்சி

நடிகையின் மகிழ்ச்சி

மலையாளத்தில் சீரியல்களில் நடித்து வருகிறார் ஆர்யா பார்வதி. செம்பாட்டு, இளையவள் காயத்திரி போன்ற சீரியல்களில் நடித்து வரும் ஆர்யா பார்வதிக்கும் 23 வயது ஆகிறது. இவரது அம்மாவுக்கு 47 வயதான நிலையில் தற்போது பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். முன்னதாக ஆர்யா பார்வதி தனது அம்மா கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X