»   »  மெழுகுதிரி தயாரிக்கும் மலையாள நடிகை!

மெழுகுதிரி தயாரிக்கும் மலையாள நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சி எடுக்கும் மியா ஜார்ஜ்

சென்னை : 'அமர காவியம்', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மலையாள நடிகை மியா ஜார்ஜ் தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த ஆண்டில் மலையாளத்தில் மட்டுமே அவரது கைவசம் பல படங்கள் இருக்கின்றன. தற்போது தான் நடிக்கவுள்ள ஒரு மலையாள படத்திற்காக மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இரண்டு நாட்கள் பயிற்சி எடுக்க இருக்கிறார் மியா ஜார்ஜ்.

Malayalam actress is to make candles

'எண்டே மெழுதிரி அதழங்கள்' என்ற படத்தில் அவர் மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனம் நடத்துபவராக நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் மெழுகுதிரி தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சி பெற இருக்கிறாராம்.

ஊட்டியில் சுமார் 60 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவுள்ள இந்தப்படம் ஒரு முக்கோண காதல் கதையாக உருவாகவுள்ளது. கதாசிரியரும், நடிகருமான அனூப் மேனன் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் ஹீரோவாகவும் நடிக்கிறார்.

English summary
Malayalam actress Miya George is well known for Tamil cinema fans. Miya George is to work two days as a candle maker for Malayalam film 'Ente mezhuthiri Athazhangal'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil