காஜல் அகர்வாலும் இல்லை.. ஸ்ருதி ஹாசனும் இல்லை.. பவன் கல்யாணுக்கு ஜோடி அந்த மலையாள நடிகை தானாம்!
ஹைதராபாத்: டோலிவுட்டின் பவர்ஸ்டார் நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து பிங்க் தெலுங்கு ரீமேக்கை போனி கபூர் தயாரித்து வருகிறார். வக்கீல் சாப் எனும் டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார்.
கொரொனா லாக்டவுன் காரணமாக இந்த மாதம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றாக
இந்நிலையில், பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படம் குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக கசியத் தொடங்கி வருகின்றன. லாக்டவுன் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா துறைக்கு கருணை காட்டி வரும் நிலையில், பவன் கல்யாணின் PSPK 28 படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

யார் இயக்குநர்
ரவி தேஜாவின் ஷாக், பவன் கல்யாணின் கப்பார் சிங், ஜூனியர் என்.டி.ஆரின் ராமய்யா வஸ்தாவய்யா, சுப்ரமணியம் ஃபார் சேல், அல்லு அர்ஜுனின் துவ்வட ஜகநாதம், வருண் தேஜின் கட்டலகொண்டா கணேஷ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹரிஷ் சங்கர் தான் பவன் கல்யானின் 28வது படத்தை இயக்க உள்ளார்.

ஸ்ருதி ஹாசன்
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான கப்பார் சிங் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் பவன் கல்யாணை ஹரிஷ் சங்கர் இயக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் ஸ்ருதி ஹாசன் தான் ஜோடி என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
Recommended Video

காஜல் அகர்வால்
மேலும், சிலர் ஸ்ருதி ஹாசன் இல்லை, காஜல் அகர்வால் இந்த முறை பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற தகவலையும் வைரலாக பரப்பி வந்தனர். காஜல் அகர்வால் ஏற்கனவே இந்தியன் 2, ஹே சினாமிகா உள்ளிட்ட பல படங்களில் படு பிசியாக நடித்து வரும் நிலையில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடிப்பாரா என்ற சந்தேகமும் சேர்ந்தே எழுந்தது.

மலையாள நடிகை
இந்நிலையில், ஸ்ருதி ஹாசனும் இல்லை காஜல் அகர்வாலும் இல்லை, ம்லையாள நடிகையான மானசா ராதாகிருஷ்ணன் தான் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 28வது படத்தில் நாயகி என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்றும் தெரிகிறது.

யார் இவர்
பாலிடன்டே வீடு, பலசாலி, கிராஸ் ரோட்ஸ், டியான், காட்டு, விகட குமாரன் மற்றும் உரியடி உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து அசத்தி வரும் மலையாள நடிகை மானசா ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணுடன் ஜோடி போடும் ஜாக்பாட் அடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











