புரட்டிப்போட்ட கொரோனா.. எருமை வளர்ப்பில் இறங்கிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையான மஞ்சு பிள்ளை எருமை வளர்ப்பில் இறங்கியுள்ளளார்.
1990ஆம் ஆண்டுகளில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மஞ்சு பிள்ளை. முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.
புகழ்பெற்ற மலையாள நடிகர் எஸ்பி பிள்ளையின் பேத்தியான நடிகை மஞ்சு பிள்ளை, சினிமா படங்கள் மட்டுமின்றி டிவி சீரயல்களிலும் நடித்து வருகிறார்.

கணவர் மகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையையும் செய்து வருகிறார் மஞ்சு பிள்ளை. கடந்த 2000ஆம் ஆண்டு சுஜித் வாசுதேவ் என்ற கேமரா மேனை திருமணம் செய்து கொண்டார் மஞ்சு பிள்ளை. இவர்களுக்கு தயா பிள்ளை என்ற மகள் உள்ளார்.

ஷுட்டிங் ஸ்பாட்
அண்மையில் தட்டிம் முட்டிம் என்ற சீரியலில் மோகனவள்ளி கதாபார்த்திரத்தில் நடித்த மஞ்சு பிள்ளையின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சு பிள்ளை அவ்வப்போது, தனது ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்களை ஷேர் செய்வார்.

எருமை வளர்ப்பு
தற்போது கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் இல்லாமல் போனதால் நடிகை மஞ்சு பிள்ளை, வேறு சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதாவது பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் கணவரின் ஆலோசனைப் படி எருமை வளர்ப்பில் இறங்கியுள்ளார் நடிகை மஞ்சு பிள்ளை.

இன்ஸ்டாவில் போட்டோஸ்
கொரோனாவால் கணவன் மனைவி இருவரும் வேலையில்லாமல் இருப்பதால் இந்த பணியில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே கோழி மற்றும் ஆடு வளர்ப்பை தொடங்கிய நிலையில் தற்போது எருமை மாடுகளையும் வளர்க்க தொடங்கியுள்ளன. தோட்டத்தில் எருமை மாடுகளை மேய்க்கும் போட்டோக்களை மஞ்சு தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு
இந்த எருமை பண்ணைக்காக ஹரியானாவில் இருந்து முரா என்ற வகையை சேர்ந்த 50 எருமைகளை வாங்கியுள்ளார் மஞ்சு. அவரது கணவரும் பிரபல ஒளிப்பதிவாளருமான சுஜித்தும் இந்த எருமை வளர்ப்பில் இறங்கியுள்ளார். வாய்ப்பில்லாமல் போனதால் துவண்டு விடாமல் வித்தியாசமான முயற்சியில் இறங்கிய நடிகை மஞ்சு பிள்ளையையும் அவரது கணவரையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











