அஜித்திற்கு போட்டியா வருவாங்க போல.. BMW சூப்பர் பைக் வாங்கிய மஞ்சு வாரியர்!
சென்னை : நடிகை மஞ்சுவாரியர் BMW சூப்பர் பைக் ஒன்றை வாங்கி உள்ளார். இணையத்தில் வெளியான போட்டோவை பார்த்தவர்கள் அஜித்திற்கு போட்டியா வருவாங்க போல என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.
மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் மஞ்சு வாரியர்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மஞ்சு வாரியர், விவாகரத்துக்கு பின் மீண்டும் அதிரடியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மஞ்சு வாரியர்
மலையான நடிகையான மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். தனுஷின் மனைவியாக பச்சையம்மா என்ற கதாபாத்திரத்தில் சும்மா அதிரடியாக நடித்திருந்தார். இவர் நடித்த கதாபாத்திரத்தை அனைவரும் பாராட்டினார்கள். அதுமட்டுமில்லாமல், அசுரன் இரண்டு தேசிய விருதை வென்றது.

துணிவு படத்தில்
அசுரன் படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும், நல்ல கதைக்காக காத்திருந்த மஞ்சு வாரியர், எச் வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். பல அதிரடியான சண்டை காட்சியில் சும்மா சுற்றி சுற்றி சண்டை போட்டு தமிழ் ஆடியன்ஸின் மனதில் பதிந்து விட்டார் மஞ்சு வாரியர்.

அஜித்துடன் பைக் ரைடு
துணிவு திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பைக் ரைடு சென்றிருந்தார். கரடு முரடான பாதையில் மஞ்சு வாரியர் சும்மா அதிரடியாக ஓட்டி கெத்து காட்டி இருந்தார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து, பைக் டூருக்கு தன்னை உடன் அழைத்துச் சென்ற அஜித்திற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

BMW சூப்பர் பைக்
அஜித்துடன் டூர் சென்று வந்ததில் இருந்து இவருக்கு பைக்கின் மீது காதல் வர தற்போது மஞ்சு வாரியர் BMW சூப்பர் பைக்கை வாங்கி உள்ளார். BMW R 1250 GS மாடலை சேர்ந்த அந்த பைக் விலை, கொச்சியில் 26 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த பைக்கை மஞ்சு வாரியர் கொச்சி BMW ஷோ ரூமில் வாங்கியுள்ளார். இந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல், அஜித்திற்கு போட்டியா வருவாங்க போல என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











