Manju Warrier : சின்னக்குழந்தையாக மாறிய மஞ்சு வாரியர்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!

கொச்சி : நடிகை மஞ்சு வாரியர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தனுஷுடன் அசுரன் படத்திலும் அஜித்துடன் துணிவு படத்திலும் நடித்துள்ள இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களும் உள்ளனர்.

கடந்த 1998ம் ஆண்டில் நடிகர் திலீப்பை திருமணம் செய்துக் கொண்ட மஞ்சு வாரியர், 2015ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார்

Malayalam actress Manju warrier shared video of slow cycling in Instagram page

மஞ்சு வாரியரின் சைக்கிளிங் வீடியோ : நடிகை மஞ்சு வாரியர் தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதே கடந்த 1998ம் ஆண்டில் நடிகர் திலீப்பை காதலித்து மஞ்சு வாரியர் திருமணம் செய்துக் கொண்டார். சில தவிர்க்க முடியாத சர்ச்சைகளை தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய புகைப்படங்களை சமீபத்தில் மஞ்சு வாரியர் இணையத்தில் வெளியிட்டிருந்தார். அவரும் மஞ்சு வாரியரைப் போலவே உருவ ஒற்றுமையில் காணப்படுகிறார்.

தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் புயல் வீசிய பொழுதிலும், தன்னுடைய மனதை மிகவும் சிறப்பாக வைத்து வருகிறார் மஞ்சு வாரியர். தமிழிலும் நடிகர் தனுஷுடன் இவர் நடித்திருந்த அசுரன் படம் சிறப்பாக கைக்கொடுத்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்தப் படத்தில் தனுஷின் ஜோடியாகவே நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. முன்னதாகவே மலையாள படங்கள்மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நிலையில், அசுரன் படம் இவருக்கு நேரடியான தமிழ்ப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றபோதிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியும் மஞ்சு வாரியருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. ஹெச் வினோத்துடன் இந்தப் படத்தின்மூலம் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருந்தார்.

Malayalam actress Manju warrier shared video of slow cycling in Instagram page

வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் மஞ்சு வாரியரில் ரோலும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் மஞ்சு வாரியர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சைக்கில் ஓட்டும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். அதில் சாதாரணமாக இல்லாமல், இப்போதுதான் சைக்கிள் பழகுவதாக வீடியோ காணப்படுகிறது.

தேர்ந்தவர்கள் வேண்டுமென்றே மெதுவாக ஓட்டுவதாகவும் அந்த வீடியோவில் காணப்படுகிறது. சைக்கிள் ஓட்டுவதில் மஞ்சு வாரியருக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லாத நிலையில், அவர் பந்தயங்களில் ஓட்டுவதுபோல வேண்டுமென்றே மெதுவாக ஓட்டுவதாகவே காணப்படுகிறது. மிகவும் இயல்பான லுக்கில் மஞ்சு வாரியர் இந்த வீடியோவில் காணப்படுகிறார். வயது வந்த ஒரு பெண்ணின் தாயாக அவர் காணப்படவில்லை. நாயகியாகவே இன்னும் ஒரு ரவுண்ட் வரலாம் என்பதாகவே அவரது லுக் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X