மலையாள சினிமாவின் அசிங்கம்.. சர்ச்சையில் சிக்கும் பெரிய நடிகர்கள்.. புகார் கூறிய நடிகை!
கொச்சி: மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு இயக்குநர்கள், நடிகர்கள் பாலியல் தொல்லை அளிப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியான பின், பலர் மீது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் அளித்து வரும் நிலையில், நடிகை மினு முனீர், நடிகர்கள் முகேஷ் மற்றும் ஜெயசூர்யா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்த இந்த அறிக்கை, தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் சில தினங்களுக்கு முன் வெளியானது.

மலையாள சினிமாவின் அசிங்கம்: அந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, பல நடிகைகள், தாங்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகை ரேவதி சம்பந்த், நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, வில்லன் நடிகர் ரியாஸ் கான், இரவு போன் செய்து பாலியல் ரீதியாக பேசியதாக புகார் கூறியிருந்தார்.
நடிகை மினி முனீர்: இதைத்தொடர்ந்து, நடிகை மினு முனீர், மலையாள செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நடிகர்கள் முகேஷ் மற்றும் ஜெயசூர்யா தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இரு நடிகர்களும் தனித்தனி சந்தர்ப்பங்களில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயசூர்யாவுடன் "டி இங்கொட்டு நோக்கியே" என்ற படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் திடீரென என் பின்னால் இருந்து பிடித்து இழுத்து அணைத்து, உடல் ரீதியாக துன்புறுத்தினார். மேலும், தன் ஆசைக்கு இணங்கி ஒத்துழைத்தால் பலன் கிடைக்கும் என்று என்னிடம் வெளிப்படையாகவே பேசினார். நான் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போனது.
கட்டாயப்படுத்தினார்: அதே போல, நடிகம் முகேஷூடன் "காலண்டர்" படத்தின் படப்பிடிப்பின் போது, என்னிடம் தவறாக நடந்து கொண்டார். தவறாக பேசினார். நான் அதற்கு ஒத்துப்போகாததால், நடிகர் முகேஷ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (அம்மா) உறுப்பினர் விண்ணப்பத்தை நிராகரித்தார். மேலும், நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு மற்றும் எடவேல பாபு என்னிடம் வெளிப்படையாக பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்து, துன்புறுத்தினார்கள் அவர்கள் மீது அரசு விசாரணைக் குழுவிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறியுள்ளார். நடிகை மினு இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் மலையாள சினிமாவில் மேலும் புயலை கிளப்பி வருகிறது.


Click it and Unblock the Notifications











