சினிமா ஆசை காட்டி சிறுமியை ஏமாற்றிய நடிகை.. சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை.. நடிகை கைது!

சென்னை: மலையாள நடிகையான மினு முனீரை சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடிகையை கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஹேமா கமிடி அறிக்கை வெளியாகி, கேரள திரையுலகையே திக்கு முக்காட வைத்துவிட்டது. அதன் பின் பல நடிகைகள் பாலியல் புகார்களை, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது முன்வைததனர். இப்போது நடிகை மினு முனீர், நடிகர் நடிகர் முகேஷ் , மணியன்பிள்ள ராஜூ , இடவேல பாபு , ஜெயசூர்யா என 4 பேருமே எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள். "டி இங்கொட்டு நோக்கியே" என்ற படத்தின் படப்பிடிப்பின் போது, நான் பாத்ரூமுக்கு சென்றேன். அப்போது, ஜெயசூர்யா என்னை பின்னால் வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டுவிட்டார். இதனால் நான் அதிர்ச்சியடைந்து, பயந்துபோய் அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டேன். தன்னுடைய ஆசைக்கு ஒத்துழைத்தால் தான் பலன் கிடைக்கும் என்று ஓபனாகவே சொன்னார். நான் இதற்கு மறுப்பு சொன்னதால், எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.

Malayalam Minu Muneer police
Photo Credit:

முத்தம் கொடுத்தார்: அதன் பிறகு, இடவேளா பாபு என்னுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், மலையாளத் திரையுலகை விட்டு சென்னைக்குச் செல்ல கட்டாயப்படுத்தினார்கள் என்று மினிமுனீர் கூறியிருந்தார். நடிகை மினு மூனிரின் இந்த பஞ்சாயத்தே ஒயாத நிலையில், கடந்த மாதம், தயாரிப்பாளரும் நடிகருமான பாலச்சந்திர மேனன், நடிகை மினு முனீர் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு ஆபாசமாக இழிவுப்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், கேரள போலீசார் அவரை கைது செய்தனர் பின் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: தற்போது, நடிகை மினு முனீரை சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மினி மூனிர் தனது உறவினரின் மகளான 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பின் அந்த சிறுமியை தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார். அப்போது, அந்த விடுதியில் நான்கு பேர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர். பின் விடுதியில் இருந்த தப்பித்த அந்த சிறுமி தற்போது, நடிகை மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் நடிகை மினு முனீரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X