Navya Nair : எழவு வீட்டில் கூட செல்ஃபி.. தாங்கமுடியாத தொல்லை.. ரசிகர்களால் டென்ஷனான நவ்யா நாயர்!
சென்னை : : எழவு வீட்டில் கூட செல்ஃபி எடுக்கிறார்கள் எங்கு சென்றாலும் ரசிகர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை என்று நடிகை நவ்யா நாயர் கூறியுள்ளார்.
மலையாள நடிகையான நவ்யா நாயகர் இஷ்டம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மலையாள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

நடிகை நவ்யா நாயர் : மலையாளத்தில் பல ஹிட் படங்களில் நடித்து சிறந்த நடிகை என பெயர் எடுத்த இவர், ராதா மோகன் இயக்கத்தில் உருவான அழகிய தீயே என்ற படத்தில் பிரகாஜ் ராஜ், பிரசன்னாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி,பாச கிளிகள், அமிர்தம், மாயா கண்ணாடி, சில நெரங்களில், ராமன் தேடிய சீதை என தமிழில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரீ என்ட்ரி : மலையாளம்,தமிழ்,கன்னட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நவ்யா நாயர். 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வந்த நவ்யா தாய் ஆனதை அடுத்து, படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். தற்போது இவர் ஜானகி ஜானே என்ற படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் ஜானகி என்ற லீட் ரோலில் நடித்துள்ளார்.

கதை பிடித்து இருந்தது : இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பேட்டி அளித்து நவ்யா நாயர், ஜானகி ஜானே படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரியாகி உள்ளேன். இத்தனை ஆண்டுகள் கழித்து நடிக்கிறோம் ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. ஆனால்,எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள். நிறைய கதைகள் கேட்டேன், அதில் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க சம்மதித்தேன்.
பல பெண்கள் இருக்கிறார்கள் : சினிமாவில் பல மாற்றங்கள் வந்து இருப்பதை பார்க்க மனதிற்கு நிறைவாக இருக்கிறது. முன்னெல்லாம் ஹீரோயின், ஹீரோவுக்கு மட்டுமே கேரவன் கொடுத்த நிலையில், தற்போது அனைவருக்கும் கேரவன் கொடுப்பதை ஒரு நல்ல விஷயமாக தெரிகிறது. முன்பை விட இப்போது படப்பிடிப்பு தளத்தில் நிறைய பெண்களை பார்க்க முடிகிறது இது பாராட்டுக்குரியது.

இறந்த வீட்டிலும் செல்ஃபி : ஒரு சிலர் கையில் இருந்த செல்போஃன், தற்போது அனைவர் கையிலும் இருப்பதால் அனைவரும் கேமரா மேன் ஆகிவிடுகிறார்கள். உடல் நலம் சரியில்லாமல், மருத்துவமனையில் இருக்கும் போதும் கூட செல்பி எடுக்கிறார்கள். இறந்த வீட்டிலும் செல்ஃபி எடுக்கிறார்கள். இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது, செல்ஃபி தொந்தரவுதான் தாக்க முடியவில்லை என்று நடிகை நவ்யா நாயர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











