விஜய் பட நடிகையின் சம்பளத்தை அபேஸ் செய்த படக்குழு? 7 வருடங்களுக்குப் பின் வெளியே வந்த உண்மை
திருவனந்தபுரம்: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராக உள்ள படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கோட். விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முக்கியமான காட்சிகளில் வருவது போல் படம் உருவாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே விஜயகாந்த் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகின்றார். புதிய கீதை படத்திற்குப் பின்னர் யுவன் சங்கர் ராஜா விஜயின் கோட் படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இந்த படத்தின், முதல் பாடல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த பாடலை விஜய் பாடியிருந்தார் என்பதும் இந்த படத்தில் விஜய் இன்னொரு பாடலையும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது, சமீபத்தில் தி கோட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில் படத்தின் சி.ஜி பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. அதே நேரத்தில் படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியது. படம் விரைவில் ரிலீசாக அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

வசூல் வேட்டையைத் தொடங்கிய தி கோட்: படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கும் நேரத்தில் புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டீவி, ரூபாய் 90 கோடிகளுக்கு வாங்கி உள்ளது என்ற தகவல் தான். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே ரூபாய் 90 கோடிக்கு வியாபாரம் ஆகிவிட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த படம்: தி கோட் படத்திற்கு இதற்கு முன்னர் வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக சுமாரான படம் எனப்பட்டாலும், வசூல் ரீதியாக படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் தி கோட் படத்திற்குப் பின்னர் 69வது படத்திற்கு விஜய் தயாராகி வருகின்றார். ஏற்கனவே கதை, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகிவிட்டது என்றும் இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் பேச்சுகள் அடிபடுகின்றது.இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பைரவா: இயக்குநர் பரதன் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் பைரவா. இந்த படம் கல்வி நிலையங்களில் நடைபெறும் நிறுவனக் கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்த மலையாள நடிகை சீமா ஜி. நாயருக்கு பேசிய சம்பளத்தை முழுமையாக கொடுக்க வில்லை எனவும் கூறியுள்ளார். முதலில் பைரவா படக்குழுவில் இருந்து ஒருவர் அழைத்தார். அதன் பின்னர் மற்றொருவர் அழைத்தார். முதல் அழைத்த நபர் கூறிய சம்பளத்தைவிடவும் இரண்டாம் நபர் முதல் நபர் கூறிய சம்பளத்தை விடவும் குறைவாக கூறினார். ஆனாலும் நான் விஜய் படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் படம் நடித்து முடித்த பின்னர் அவர்கள் கூறிய சம்பளத்தை முழுமையாக கொடுக்கவே இல்லை எனக் கூறியுள்ளார். இந்த செய்தி மலையாள ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. கேரளாவிலும் விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











