கேரளாவிலிருந்து தமிழுக்கு விருந்து படைக்க வரும் சிருந்தா...!
சென்னை கேரளாவிலிருந்து நாயகிகள் வருவது தமிழுக்குப் புதிதில்லை. அந்த வகையில் இன்னொரு நாயகி இறக்குமதியாகியுள்ளார். பெயர் சிருந்தா. வெண்நிலா வீடு என்ற படத்தில் 2வது நாயகியாக இவர் நடிக்கிறாராம்.
விஜயலட்சுமி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரேடியோ மிர்ச்சி செந்தில் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனும் இருக்கிறார் இப்படத்தில். அவருக்கு ஜோடியாகத்தான் நடிக்கவுள்ளாராம் சிருந்தா.
ஆதர்ஷ் ஸ்டூடியோவின் தயாரிப்பில் அருண் மகாலிங்கம் இயக்கும் இப்படம், காதல் படம்தான். ஆனால் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாம்.
கிராமத்து சூழலிருந்து சென்னைக்குப் பெரும் எதிர்பார்ப்புடன் அந்த ஜோடி குடியேறுகிறது. ஆனால் அங்கு இவர்கள் சந்திக்கும் அனுபவம் எதிர்பாராதது. அந்த அனுபவங்கள் இவர்களது வாழ்க்கையைப் புரட்டி்ப போடுகிறது.

வெற்றி மகாலிங்கம்
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட வெற்றி வீரன், தனது பெயரை வெற்றி மகாலிங்கம் என மாற்றி இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே அரும்பு மீசை குறும்புப் பார்வை படத்தை இயக்கியவர் ஆவார்.

மிர்ச்சி செந்தில்
மிர்ச்சி செந்தில் என்று அறியப்பட்டு பின்னர் தவமாய் தவமிருந்து படம் மூலம் சினிமா நடிகராகி, மதுரை டிவி தொடர் மூலம் மக்களிடையே சரவணன் என்ற பெயரில் பிரபலமாகி, மீனாட்சி சரவணன் தொடர் மேலும் பெரிய ஆளாக மாறிப் போயுள்ள சரவணன்தான் இப்படத்தின் நாயகன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயலட்சுமி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயலட்சுமி இப்படத்தில் நடிக்கிறார். அதுவும் கிராமத்துக் குடும்பப் பெண் வேடத்தி்ல வருகிறாராம். சரவணனுக்கு இவர்தான் ஜோடி.

வித்தியாசமான படம்.. விஜயலட்சுமி நம்பிக்கை
இப்படம் குறித்து விஜயலட்சுமி கூறுகையில், இது வித்தியாசமான கதைக்களம். முதல் பாதியில் கிராமத்துப் பெண்ணாக வருகிறேன். பின்னர் நகரத்தில் வந்து குடியேறும் பெண்ணாக, நகரத்தில் வசிக்கும் பெண்ணாக வருகிறேன். கிராமத்து வேடத்தில் நடிப்பது சிரமமான காரியம். அதை இப்படத்தில் உணர்ந்தேன். இருப்பினும் இது வித்தியாசான, புதுவிதமான அனுபவமாக இருக்கிறது என்கிறார் புன்னகையுடன்.

கண்கலங்கி கால்ஷீட் கொடுத்தார்
படத்தின் கதையை இயக்குநர் வெற்றி மகாலிங்கம் சொல்ல ஆரம்பித்தபோது உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த விஜயலட்சுமி, கிளைமேக்ஸ் காட்சியை மகாலிங்கம் விவரித்தபோது கண்கலங்கிப் போய் விட்டாராம். உடனே கால்ஷீட்டையும் கொடுத்து விட்டாராம்.

சிக் அழகுடன் சிருந்தா
படத்தில் இன்னொரு நாயகியாக நடிப்பவர்தான் சிருந்தா. இவர் கேரளத்து வரவு. அங்கே 22 பீமேல் கோட்டயம், தட்டத்தின் மறயத்து, அன்னையும் ரசூலும் ஆகிய மலையாளப் படங்களில் திறமை காட்டியவர் இந்த சிருந்தா. இப்போது தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

பரோட்டா சூரி
படத்தில் இவர்கள் தவிர காமெடியன் பரோட்டா சூரியும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.இவரும் வெற்றி மகாலிங்கமும் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாக சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











