twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளாவில் முகாம்களில் இருக்கும் மக்களை ஆடிப்பாடி மகிழ்வித்த நடிகைகள்

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கும் பெண்கள், குழந்தைகளை ஆடிப் பாடி மகிழ்வித்துள்ளனர் மலையாள நடிகைகள்.

    By Rajeswari
    |

    கொச்சி: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கும் பெண்கள், குழந்தைகளை ஆடிப் பாடி மகிழ்வித்துள்ளனர் மலையாள நடிகைகள்.

    கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர்.

    Malayalam actresses entertain people in flood relief camp

    பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல விதங்களில் பொருளுதவி, பணஉதவி எனப் பல இடங்களில் இருந்து குவிந்த வண்ணம் உள்ளன. இருந்தபோதிலும் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    அப்படி தங்கள் உடைமைகளை இழந்து வருத்தத்தில் இருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் முகாம்களுக்கு சென்று, அவர்கள் மத்தியில் அமர்ந்து பாட்டுப்பாடி, பேசி மகிழ்வித்தனர்.

    சினிமா நடிகைகள் தங்களுடன் சரிசமமாக அமர்ந்து பேசி சிரித்ததில் முகாம்களில் இருந்தவர்கள் தங்களின் கவலையை சிறிது நேரம் மறந்தனர்.

    English summary
    Malayalam actresses Remya Nambeesan, Reema Kallingal, Parvati have entertained the people in flood relief camps in Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X