பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்த கொரோனா.. 6 பேர் பாதிப்பு.. அதிரடியாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு!

சென்னை: பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

எண்ட்மோல் ஷைன் இந்தியா சார்பில் நாடு முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.

மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்ட நிலையில், அதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

பிக் பாஸிடம் இருந்து போட்டியாளர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று பார்த்தால், கொரோனாவிடம் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியே தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கன்னட பிக் பாஸ் சமீபத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கொரோனா வேட்டு வைத்துள்ளது.

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையை அடுத்து உள்ள பூந்தமல்லியில் தான் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்க பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் இவிபி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பிக் பாஸ் வீட்டிற்குள் தான் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

6 பேருக்கு கொரோனா

6 பேருக்கு கொரோனா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வாரம் தோறும் கொரோனா சிகிச்சை எடுக்கப்படும். இந்நிலையில், சமீபத்தில் கொரோனா சிகிச்சை எடுக்கப்பட்ட போது 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி நிகழ்ச்சியை நடத்துபவர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

படப்பிடிப்பு ரத்து

படப்பிடிப்பு ரத்து

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இரண்டு வாரங்களுக்கு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் தொடருமா

பிக் பாஸ் தொடருமா

தமிழ்நாட்டில் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு வாரங்களுக்கு பின்னரும் மீண்டும் மலையாள பிக் பாஸ் படப்பிடிப்பு தொடருமா என்கிற கேள்விக் குறியும் எழுந்துள்ளது. கன்னட பிக் பாஸை போலவே மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு இல்ல ராஜா

வாய்ப்பு இல்ல ராஜா

மேலும், வரும் ஜூன் மாதத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சீசனை போலவே அக்டோபர் மாதத்திற்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 5வது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X