ஆண், பெண் குரல்களில் பாடிய பிக்பாஸ் பிரபலம்! திருநங்கை என கமண்ட் செய்த இணையவாசிக்கு வலுத்த எதிர்ப்பு

கொச்சின்: பாடகி லஷ்மி ஜெயன், சினிமாக்களில் பாடுவது மட்டும் இல்லாமல் பல்வேறு கச்சேரிகளிலும் பாடி வருகின்றார். இதுமட்டும் இல்லாமல் இவர் நல்ல வயலின் கலைஞர் ஆவார். மேலும் இவர் வானொலியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒளிபரப்பட்ட ட்ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 3இல் போட்டியாராக பங்கேற்றார். திருவனந்த புரத்தைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் தொடர்ந்து பல விழாக்களில் பாடி வருகின்றார்.

Bigg Boss

தொடக்கத்தில் மேடைப் பாடகராக இருந்த லஷ்மி ஜெயன் அதன் பின்னர் தனது பாடல் பாடும் ஆர்வத்தின் மூலம் இன்று இணையத்தில் மிகவும் கவனம் பெற்ற பாடகர்களில் ஒருவராக உள்ளார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3இல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் 15 நாட்கள் மட்டுமே இருந்த பாடகி லஷ்மி ஜெயன் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தினை கனிசமான அளவிற்கு சேகரித்தார்.

Bigg Boss

ஆண் பெண் குரல்: பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து 15 நாட்களில் வெளியேறி இருந்தாலும் தனது திறமை மீது கொண்ட நம்பிக்கையினால் இன்றைக்கும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாடல் பாடியுள்ளார். ரோஜா படத்தில் இடம் பெற்றுள்ள புது வெள்ளை மழை பாடலைப் பாடியுள்ளார். இதில் ஆண் மற்றும் பெண் குரல்களில் அவரே பாடல் பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது பெண் குரலில் பாடிக்கொண்டு இருக்கும்போதே திடீரென ஆண் குரலிலும் பாடுகின்றார்.

பாராட்டு: இந்த வீடியோவினைப் பார்த்த பலர் பாடகி லஷ்மி ஜெயனைப் பாராட்டி வருகின்றனர். இவரைப் பற்றித் தெரியாத ஒரு சிலர் பாடகி லஷ்மி ஜெயனை திருநங்கை எனக் கூறினர். இதற்கு லஷ்மி ஜெயன் குறித்து நன்கு தெரிந்த மற்றொரு ரசிகர், " பாடகி லக்ஷ்மி ஜெயன் ஒரு அழகான ஆண் மகனை பெற்றெடுத்த 100% பெண்தான். வயலின் கலைஞர், பிக் பாஸ் ஷோ நட்சத்திரம், தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி பல திறமை கொண்டவர். தற்போது விவகாரத்து பெற்றவர்" என பதிலடி கொடுத்து மட்டும் இல்லாமல் எதுவும் தெரியாமல் உளறக்கூடாது என காட்டமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

அழகான பெண்: மேலும் ஒரு சில இணையவாசிகள், " சில ஆண்கள் பெண் குரலில் பாடும் போது டப்பிங் வாய்ஸ் போல இருக்கும் ஆனால் இந்த பெண் பாடுவதை பார்த்தால் மட்டுமே இவர் ஆண் குரலில் பாடுவது தெரிகிறது. அவ்வளவு பெர்ஃபெக்ட்" எனவும் சிலர் அழகான பொண்ணு ஆண் குரலில் பாடுவதை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கின்றேன் என பதிவிட்டு வருகின்றனர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடருகின்றனர்.

Bigg Boss

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X