ஊரடங்கு விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு.. பிக்பாஸ் வீட்டுக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி!

சென்னை: ஊரடங்கு விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்தியதை தொடர்ந்து சென்னை மலையாள பிக்பாஸ் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Bigg Boss Setற்க்கு Seal வைத்த காவல்துறை | அதிர்ச்சியில் ரசிகர்கள்! | EVP Filmcity

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதனை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் இங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஃபெப்சி அறிவிப்பு

ஃபெப்சி அறிவிப்பு

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தபட்டனர் அதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கு முடியும் மே 31ஆம் தேதி வரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருந்தார்.

ஊரடங்கு விதியை மீறி

ஊரடங்கு விதியை மீறி

இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வந்தது.

பிக்பாஸ் வீட்டுக்கு அபராதம்

பிக்பாஸ் வீட்டுக்கு அபராதம்

இதையடுத்த பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், மற்றும் பூந்தமல்லி தாசில்தார் சங்கர் ஆகியோர் தலைமையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று அங்கு நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிக்பாஸ் வீட்டுக்கு சீல்

பிக்பாஸ் வீட்டுக்கு சீல்

பின்னர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தியதையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மலையாள பிக்பாஸ் வீட்டுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைக்க முடிவு செய்து பிக்பாஸ் அரங்கத்தின் மூன்று நுழைவாயிலுக்கு சீல் வைத்தனர்.

வேறு இடங்களுக்கு மாற்றம்

வேறு இடங்களுக்கு மாற்றம்

இதையடுத்து படப்பிடிப்பு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு, பிக்பாஸ் அரங்கத்திற்குள் உள்ள 7 நடிகர்கள், நடிகைகள் கொரோனா கவச உடைகளுடன் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தபட்டனர்.

ஊழியர்கள் வெளியேற்றம்

ஊழியர்கள் வெளியேற்றம்

அவர்களின் உடமைகள் எடுக்க சிறிது கால நேரம் கொடுக்கப்பட்டது. அவர்களும் அங்கிருந்து கார்களில் கிளம்பி சென்றனர். உள்ளே படப்பிடிப்பில் ஈடுபட்ட 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பிலிம் சிட்டிக்கே சீல்

பிலிம் சிட்டிக்கே சீல்

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பிலிருந்தும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்த பிக்பாஸ் அரங்கத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது ஈவிபி பிலிம் சிட்டிக்கே சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X