தமிழில் அதிதி ஆகிறது மலையாளத்தில் வெளியான காக்டெயில்!

By Shankar

விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் அடுத்து இயக்கும் படத்துக்கு அதிதி என்று பெயர் சூட்டியுள்ளார்.

ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இனொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார்.

(அதிதி படங்கள்)

அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, மயில்சாமி, சென்ராயன், காஜல் பசுபதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

முதன்முறையாக பாடகர் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிகராக நடிக்கிறார் இவருக்கு அழுத்தமான கதாபாத்திரம் இவருக்கும்.

பரத்வாஜ் இசை அமைக்க, நா முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார்.

athithi

படம் பற்றி இயக்குனர் பரதன் கூறுகையில், "விஜயை வைத்து அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய நான் அடுத்து இயக்கும் படம் இது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன காக்டெயிலின் ரீமேக் இது.

சமீபத்தில் நந்தா - அனன்யா இருவரும் ஒரு கோயிலில் சாமி கும்பிட வருகிறார்கள். அவர்களை பார்த்த மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாள்களுடன் துரத்துவது மாதிரியான பரபரப்பான காட்சி ஒன்று சென்னையில் படமானது. நிறைய பேர் நிஜம் என்றே நம்பினார்கள். அத்தனை சிறப்பாக அந்த காட்சி அமைந்தது.

காதல், பேமிலி, கிரைம் கலந்த திரில்லர் கதையாக அதிதி உருவாகிறது. படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X