அதிர்ச்சி.. வெறும் 42 வயது தான் ஆகுது.. மலையாள நடிகை சுபி சுரேஷ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை சுபி சுரேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள சினிமாவில் காமெடி நடிகையாகவும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும் வந்தவர் நடிகை சுபி சுரேஷ்.
வெறும் 42 வயதே ஆன நடிகை சுபி சுரேஷ் திடீரென இன்று உயிரிழந்தது ஒட்டுமொத்த மலையாள திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சுபி சுரேஷ் காலமானார்
சமீப காலமாக தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் இளம் வயதிலேயே மரணித்து வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 57 வயதில் நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவு காரணமகா உயிரிழந்தது பலரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ள நிலையில், மலையாள நடிகை சுபி சுரேஷ் 42 வயதில் காலமானது ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கல்லீரல் பாதிப்பு
கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை சுபி சுரேஷ் கடந்த ஜனவரி 28ம் தேதி ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையான ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தீவிர சிகிச்சை அளித்தும் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை.

மருத்துவமனையிலேயே போன உயிர்
மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகையாக சில படங்களில் நடித்த சுபி சுரேஷ் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அசத்தி வந்தார். இந்நிலையில், கடுமையான கல்லீரல் பாதிப்பு காரணமாக சமீபத்தில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சுபி சுரேஷ் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 22ம் தேதி காலை காலமானார்.

பிரபலங்கள் இரங்கல்
பிரபல மலையாள காமெடி நடிகை சுபி சுரேஷ் வெறும் 42 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த தகவல் ஒட்டுமொத்த மலையாள திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் நடிகை சுபி சுரேஷின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

20க்கும் மேற்பட்ட படங்கள்
திருவனந்தபுரத்தில் பிறந்த நடிகை சுபி சுரேஷ், ராஜசேனனின் கனக சிம்மாசனம் படத்தின் மூலம் அறிமுகமானார். கிரகநாதன், தகசரலகலா, எலசம்மா என்ன ஆண் குட்டி, டிராமா மற்றும் காரியஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சுபி சுரேஷ் உடன் நடித்த சக நடிகர்கள் அவரது மறைவால் மனவேதனை அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











