Jude Anthany joseph: கமல்ஹாசனை பார்த்து நடுங்கிட்டேன்.. 2018 பட இயக்குநரின் அனுபவம்!
சென்னை: உலக நாயகனாக கொண்டாடப்பட்டுவரும் நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் அறிமுகமானவர்.
தொடர்ந்து ஹீரோ, நடன இயக்குநர், உதவி இயக்குநர், பாடகர், பாடலாசிரியார், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருபவர். அவருக்கு இசையமைப்பிலும் அதிகமான ஆர்வம் காணப்படுகிறது.
இத்தனை வயதை கடந்துள்ள போதிலும் சிறு குழந்தைக்கான சுறுசுறுப்புடன் தற்போதும் தயாரிப்பாளர், அரசியல்வாதி, நடிகர் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார் கமல்.

கமலின் ரியல் மற்றும் ரீல் மேஜிக்கை பாராட்டிய 2018 பட இயக்குநர்: நடிகர் கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அவர், சினிமாவை விட்டு சிறிதுகாலமும் விலகாமல், தொடர்ந்து சினிமாவையே தனது மூச்சாக சுவாசித்து வருகிறார். களத்தூர் கண்ணம்மா முதல் தற்போது இந்தியன் 2 வரை கமல்ஹாசனின் திரையுலகப் பயணம் மிகுந்த ஆச்சர்யத்திற்குரியது. சினிமா மீது அவர் கொண்ட காதல், தொடர்ந்து சிறப்பாக பயணிக்க செய்து வருகிறது.
நடிகராக மட்டுமில்லாமல் சினிமாவில் நடன இயக்குநர், உதவி இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன். ஒரு கேரக்டருக்காக மெனக்கெடும் பல நடிகர்களை தற்போது நாம் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக செயல்பட்டவர் கமல்ஹாசன். தற்போதும் செயல்பட்டு வருபவர். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், சேனாபதி கேரக்டருக்காக தினந்தோறும் 3 மணிநேரம் மேக்கப் போடுவதற்காக மட்டுமே செலவழித்து வருகிறார். மேலும் அந்த மேக்கப்பை அழிப்பதற்கும் 3 மணிநேரங்கள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளை கடந்தும் கமல்ஹாசன் சினிமா வரைபடமாக திகழ்வார் என்று பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகின்றனர். திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு அவர் ஒரு என்சைக்கிளோபீடியா என்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் உதவி இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கும் அவர் ஒரு உந்துதலாக இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள 2018 படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், கமலை தான் சந்தித்தபோது நடந்து சுவாரஸ்யங்களை தற்போது பகிர்ந்துள்ளார். கமல்ஹாசனின் மேஜிக்கை அவரது படங்களிலும் ரியல் வாழ்க்கையிலும் பார்த்துதான் தான் வளர்ந்ததாகவும் தான் தற்போது ஒரு இயக்குநர், நடிகர் என்றெல்லாம் பெயர் எடுத்துள்ளதற்கு முக்கியமான காரணம் கமல்ஹாசன்தான் என்றும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
சினிமாவின் என்சைக்கிளோபீடியாவான கமல்ஹாசனை சந்தித்த தருணத்தை தான் மிகவும் அதிர்ஷ்டமாக உணர்வதாகவும் கூறியுள்ளார். கமல்ஹாசனை எனக்கு எதிராக பார்த்தபோது தான் நடுநடுங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். டொவினோ தாமஸ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2018 படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிக வசூலை குவித்துள்ள முதல் மலையாள படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











