Director Siddique - அபாய கட்டத்தில் இயக்குநர் சித்திக்.. பதற்றத்தில் திரையுலகினர்
திருவனந்தபுரம்: Director Siddique (இயக்குநர் சித்திக்) மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சித்திக் தற்போது அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மலையாள திரையுலகில் பிரபலமான இயக்குநராக வலம் வந்தவ இயக்குநர் சித்திக். பாப்பன் ப்ரியபேட்டா பாப்பன் என்ற படத்தின் மூலம் கதையாசிரியராக அறிமுகமானார். அதனையடுத்து நாடோடிக்கட்டு என்ற படத்திலும் கதையாசிரியாக அறிமுகமானார். அவரது ஆரம்பத்தில் எழுதிய இரண்டு கதைகளுமே நல்ல வரவேற்பை பெற்றதால் இவரே இயக்குநராக களமிறங்கலாம் என்ற கருத்து எழுந்தது.

இயக்குநராக அறிமுகம்: அதனையடுத்து 1989ஆம் ஆண்டு வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கதையாசிரியராக எப்படி தனது முத்திரையை பதித்தாரோ அதேபோல் இயக்குநராகவும் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதனையடுத்து மலையாள திரையுலகில் வாண்டட் இயக்குநராக மாறினார்.
இயக்குநர் மட்டுமில்லை: இயக்குநராக ஒரு படம் இயக்கிவிட்டாலே ஒருவர் இணை இயக்குநராக பணியாற்ற யோசிப்பார். அதில் விதிவிலக்கு சித்திக். கதையாசிரியாகவும், இயக்குநராகவும் வென்ற அவர் ரேவதி நடித்த காக்கோத்திகாவிலே அப்பூப்பன் தாடிக்கல் என்ற படத்தில் இணை இயக்குநராகவும், மனிச்சித்திரதாளு என்ற படத்தில் செகண்ட் யூனிட் டைரக்டராகவும் பணியாற்றினர்.
அடையாளப்பட்ட சித்திக்: இந்தச் சூழலில் 1999ஆம் ஆண்டு அவர் இயக்கிய ப்ரெண்ட்ஸ் படம் அவருக்கான அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.அதனையடுத்து அந்தப் படத்தை தமிழிலும் ரீமேக் செய்தார். அதில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரும் நடித்திருந்தார். படம் மெகா ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து எங்கள் அண்ணா, காவலன் உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கினார். இதில் காவலன் படம் மெகா ஹிட்டாகி விஜய்க்கு கம்பேக்காக அமைந்தது. கடைசியாக அவர் 2020ஆம் ஆண்டு பிக்பிரதர் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
அபாய கட்டத்தில் சித்திக்: இந்தச் சூழலில் அவருக்கு நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னை வந்தது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக்கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனையடுத்து கொச்சி அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ கருவியின் துணையோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில் அவர் தற்போது அபாய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











