Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தங்கக் கடத்தல் விவகாரம்.. மலையாள நடிகர்களுக்கும் தொடர்பு.. பிரபல தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்!
கொச்சி: கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் மலையாள நடிகர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தயாரிப்பாளர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர்.
தோழியுடன்.. நீச்சல் குளத்தில் கட்டிப் புரளும் பூனம் பஜ்வா.. வைரலாகும் வீடியோ.. ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்

தேசிய விசாரணை
அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்ததும், அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி என்பதும் தெரியவந்தது. அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். தங்கத்தை வாங்க வந்திருந்த தூதரக முன்னாள் ஊழியர் சரத்குமாரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

ஸ்வப்னா சுரேஷ்
இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. இவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் பணி புரிந்தவர் எனக் கூறி எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பின. எந்த விசாரணைக்கும் தயார் என்றார் பினராயி விஜயன். இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

அடுத்தடுத்து கைது
ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ விசாரணை ஒரு புறமிருக்க, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர்
இந்நிலையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பிரபல தயாரிப்பாளரும் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான சியாத் கோகர் தெரிவித்துள்ளார். இவர், தனது கோகர் பிலிம்ஸ் சார்பில் மலையாளத்தில் பட்டணபிரவேசம், சினேகசாகரம், ஒரு மருவத்தூர் கனவு, அலைஸ் இன் வொன்டர்லேண்ட் உட்பட சுமார் சுமார் 20 படங்களைத் தயாரித்துள்ளார்.

பின்னணியில் நடிகர்கள்
அவர் கூறும்போது, 'இந்த வழக்கில் தொடர்புடைய பாசில் பரீத், கடத்தல் பணத்தை மலையாள சினிமாவில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருந்தார். பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னணியில் சில நடிகர்களும் டெக்னீஷியன்களும் ஆதாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு இந்தக் கடத்தல் குறித்து தெரியும். மலையாள திரைத்துறையினரையும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.