twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யூகே ஆசிய திரைப்பட விழா விருதை பெற்ற மலையாள படம் தி கிரேட் இந்தியன் கிச்சன்

    |

    கொச்சி : மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.

    அந்த வரிசையில் யூ.கே. ஆசிய திரைப்பட விழா விருதை தற்போது அந்த படம் தட்டிச் சென்றுள்ளது.

    மேக்கிங் வேவ்ஸ் டிஜிட்டலி பிரிவில் விருதை அந்த படம் பெற்றுள்ளது.

    சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு

    சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு

    மலையாளத்தில் உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் இந்திய குடும்ப அமைப்பு மீதான விமர்சனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தை ஜோ பேபி என்பவர் இயக்கியுள்ளார். இந்திய குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு விருதுகள்

    பல்வேறு விருதுகள்


    இந்நிலையில் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் தட்டி வந்துள்ளது. சமீபத்தில் கூழாங்கல் படத்துடன் சேர்த்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. சாதாரணமாக பார்க்கப்பட்ட இந்த படம் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

    மேக்கிங் டிஜிட்டலி பிரிவு விருது

    மேக்கிங் டிஜிட்டலி பிரிவு விருது

    இதனிடையே 23வது யூகே ஆசிய திரைப்பட விழாவில் மேக்கிங் வேவ்ஸ் டிஜிட்டலி பிரிவில் விருதை பெற்றுள்ளது. கடந்த 26ம் தேதி துவங்கி 6ம் தேதிவரையில் இந்த திரைப்பட விழா நடைபெற்றது. நம்பிக்கையின் ஒளி என்ற கருத்தில் இந்த ஆண்டு இந்த திரைப்பட விழா நடைபெற்று முடிந்துள்ளது.

    பெண் அடிமைத்தனம்

    பெண் அடிமைத்தனம்

    சமையலை முக்கியமானதாக கருதும் நம்மூரில் சமையலை ஒரு வேலையாக மட்டுமின்றி உணர்வுப்பூர்வமாக செய்வதன்மூலம் எவ்வாறு பெண்கள் அடிமையாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முக்கிய கருவாக்கியிருக்கிறது தி கிரேட் இந்தியன் கிச்சன் படம்.

    English summary
    The great Indian kitchen movie wins UK Asian film festival award
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X