KG George passed away: பிரபல இயக்குநர் கேஜி ஜார்ஜ் காலமானார்.. சோகத்தில் திரைத்துறை!
கொச்சி: பிரபல மலையாள திரைப்பட இயக்குநரான கேஜி ஜார்ஜ் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 77.
கேரள மாநிலம் குளக்கட்டில் 1946ம் ஆண்டு மே மாதம் 24ந் தேதி பிறந்தவர் கீவர்கீஸ் ஜார்ஜ்.

கேஜி ஜார்ஜ்: அதன் பின் இயக்குனர் ராமு காரியத்தின் உதவியாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் 1975ம் ஆண்டு ஸ்வப்நதானம் என்கிற மலையாள படத்தை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். அவரது முதல் திரைப்படமே மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்
கேரள அரசின் உயரிய விருது: இதைத் தொடர்ந்து உள்க்கடல், மேளா, யவனிகா, லேகாயுடே மரணம் ஒரு பிளாஷ்பேக், அடமிண்டே வாரியேள் மற்றும் மேட்டோரல் என 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி மலையாள சினிமாவில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்தார். சினிமாவில் இவரின் சேவையை பாராட்டும் வகையில் கேரள அரசு இவருக்கு உயரிய விருதான ஜே சி டேனியல் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

இன்று உயிரிழந்தார்: 1998ம் ஆண்டு எலவம்கோடு தேசம் படத்தை இயக்கிய இவர் அதன் பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காக்கநாட்டில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு செல்மா ஜார்ஜ் என்ற மனைவியும், தாரா என்ற மகளும், அருண் என்கிற மகனும் உள்ளனர்.
இவரது உயிரிழப்பு மலையாள சினிமாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கேஜி ஜார்ஜின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் காக்கநாட்டில் உள்ள வீட்டில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு மலையாள பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











