அடக்கடவுளே.,அடுத்தடுத்து 3 உயிரிழப்பு.. கடும் சோகத்தில் திரைத்துறை!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் பைஜு பணிக்கர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 59.
வி.ஆர்.கோபிநாத் இயக்கத்தில் 1987ம் ஆண்டு வெளியான ஒரு மே மாசப்புலரி பட தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார். இவர், சினிமா தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் பல மலையாள தொலைக்காட்சி தொடர்களையும், பல விளம்பர நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளர் பைஜு பணிக்கர்: கடந்த சில நாட்களாக மருத்துவமனையல் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது உடல் குடப்பனக்குன் தேவி கோயில் அருகே உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இறுதிச்சடங்குக்கான சாங்கியங்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் தைக்காடு சாந்திகாவத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு கேரள திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. பலரும் அவரது மறைவுக்கு இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.ஆர். சிவாஜி: கடந்த சனிக்கிழமை கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்த எஸ்.ஆர். சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 66 வயதே ஆன அவர் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார்.
அடுத்தடுத்த சோகம்: அதே போல பிரபல இசையமைப்பாளர் தஷி, கேரளாவிற்கு சென்று விட்டு, நண்பர்களுடன் காரில் திருப்பூர் அவிநாசி சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியதில் இசையமைப்பாளர் தஷி மற்றும் அவரது நண்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Click it and Unblock the Notifications











