Don't Miss!
- News
பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த மலையாள ஹாட் ஜோடி: ஹாலிவுட்டுக்கே சவால்.. இணையத்தை கலங்கடிக்கும் ட்ரெய்லர்
திருவனந்தபுரம்: மலையாளத்தில் அசோக் ஆர். நாத் இயக்கியுள்ள HOLY WOUND படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் ஜானகி சுதீர், அம்ருதா வினோத் இருவரும் லெஸ்பியன் தோழிகள் கேரக்டரில் நடித்துள்ளனர்.
HOLY WOUND படத்தின் ட்ரெய்லர், வரவேற்பையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்று வருகிறது.
மலேசியாவில்
விருமன்
பட
பிரமோஷன்ஸ்..
நடுக்கடலில்
புகைப்படம்
வெளியிட்ட
கார்த்தி!

மாற்றங்களை நோக்கி மலையாள திரையுலகம்
இந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் உலக சினிமா வகைகளுக்கு உதாரணமாகக் கூறப்படுவது மலையாள படங்கள் தான். கல்ட் சினிமா எனப்படும் வாழ்வியலின் யதார்த்தங்களை அப்படியே திரையில் கொண்டு வருவதில் சேட்டன்மார்கள் பலே கில்லாடிகள். ஒரேயொரு சிறு புள்ளியை மட்டும் வைத்துக்கொண்டு, அதனை கதையாக்கி திரைக்கதை எழுதி படங்கள் இயக்குவதில் அவர்களை அடித்துக்கொள்வதற்கு ஆளில்லை.

புதுமையான படைப்புகளின் முன்னோடி
இந்தியாவில் மலையாள திரையுலகம் மட்டும் 50 ஆண்டுகள் முன்னோக்கி பயணித்து வருவதாக, முன்னணி சினிமா விமர்சகர்கள் பலர் கூறுகின்றனர். மலையாள படங்களை தொடர்ச்சியாகப் பார்த்து வந்தால், அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வார்கள். கதைகளுக்கு மட்டுமே அங்கு முழுமையான முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

மனித உணர்வுகளை பேசும் காலக்கண்ணாடி
மலையாள திரைப்படங்களில் மனிதனின் உணர்வுகள் மிக நுட்பாமாகப் பேசப்படுகின்றன. எல்லா மொழிப் படங்களிலும் மனித உணர்வுகள் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உதாரணமாக தமிழ் சினிமாவில் துணை பாத்திரமாக வரும் ஒரு கேரக்டரை, மலையாளத்தில் ஹீரோவாக்கி படமும் எடுத்து வெற்றிபெறுவார்கள். எல்லாவிதமான மனித உணர்வுகளை வெளிப்படையாக பேசிவிடுவதிலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் மலையாள படங்கள் தான் முதலில் இருக்கின்றன.

லெஸ்பியன் ஜோடிகளின் கதை
நிஜ வாழ்வில் தன்பால் ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என, நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்டது. அது சரியா தவறா என்ற விவாதம் ஒருபக்கம் இருந்தாலும், இன்று அதைப்பற்றி ஒரு படம் வெளியாகும் போது பல சர்ச்சைகள் வண்டிகட்டி வருகின்றன. தற்போது மலையாளத்தில் அசோக் ஆர். நாத் HOLY WOUND என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இரு தோழிகளுக்குள் ஏற்படும் லெஸ்பியன் உறவை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

அதிரவைத்த HOLY WOUND ட்ரெய்லர்
இந்நிலையில், HOLY WOUND என்றால் தமிழில் புனித காயம் என அர்த்தம். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ஹாலிவுட் படங்களுக்கே சவால் விட்டுள்ளன. இரண்டு தோழிகள் உணர்ச்சிப் பெருக்கில் லெஸ்பியன்களாக மாறுவதை ராவாக அப்படியே திரையில் காட்டியுள்ளனர். கவர்ச்சி அதிகமாக இருந்தாலும், அந்த திரைமொழி பல உண்மைகளை பேசியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

உதட்டோடு உதடு வைத்து முத்தம்
HOLY WOUND படத்தில் ஜானகி சுதீர், அம்ருதா வினோத் இருவரும் லெஸ்பியன் தோழிகளாக நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லரில், தோழிகள் இருவரும் படு கவர்ச்சியாக நடித்துள்ளனர். அதேபோல் படமாக்கப்பட்டிருக்கும் விதமும், கன்னியாஸ்திரி வேடத்தில் இருக்கும் பெண், இன்னொரு பெண்ணின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகளும், பலரையும் சூடேற்றியுள்ளது. அதேநேரம் இந்த ட்ரெய்லருக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

படக்குழுவினர் விளக்கம்
இந்நிலையில், இந்த ட்ரெய்லர் குறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழுவினர், லெஸ்பியன் உணர்வு கொண்டவர்களும், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களும், மனிதர்கள் தான். அவர்கள் பற்றி தவறாக சிந்திக்கக் கூடாது என்பதையே இந்தப் படம் உணர்த்துவதாகக் கூறியுள்ளனர். படக்குழுவின் இந்த விளக்கத்திற்கு பலர் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இதனிடையே HOLY WOUND படத்தின் ட்ரெய்லர், கடும் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் இது புதிதல்ல
மலையாளத்தில் ஒரினசேர்க்கை குறித்த படங்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. 1978ல் வெளியான ''ரெண்டு பெண்குட்டிகள்', 1986ல் வெளியான 'தேசாதனக்கிளி கரையறில்லா', 'சஞ்சரம்-தி ஜர்னி'. போன்ற பல படங்கள் வெளியாகியுள்ளன. ரொம்ப முக்கியமாக 'மும்பை போலீஸ்' என்ற படத்தில் மலையாள முன்னணி நடிகர் பிருதிவிராஜ் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.