Jailer: ஜெயிலருடன் மல்லுக்கட்ட தயாரான ஜெயிலர்.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு வரும் 28ம் தேதி பிரம்மாண்டமான அளவில் சென்னையில் நடைபெறவுள்ளது.

Malayalam Jailer movie going to clash with Rajinis Jailer

ரஜினியின் ஜெயிலர் படத்துடன் மோதும் மலையாள ஜெயிலர் படம்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் படம் உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர் படத்தையும் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து படத்தின் இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் தமன்னா ஆட்டத்தில் வெளியான காவாலா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹுகும் பாடலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடல்கள் யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன. காவாலா பாடலுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ரீல்ஸ் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக இந்தப் பாடல் வெளியானது.

படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், வரும் 28ம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் பிரம்மாண்டமான அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களையும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஒவ்வொரு அப்டேட்களுக்கும் சிறப்பான பிரமோஷனல் வீடியோக்களையும் முன்னதாக வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், அதே நாளில் மலையாளத்தில் ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது. த்யான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள இந்தப் படத்தை ஷகிர் மாடத்தில் இயக்கியுள்ளார். ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் மலையாளத்திலும் ரிலீசாகவுள்ளது. அதையொட்டி படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். இதனிடையே, மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் படம் உருவாகியுள்ளதால், ரஜினியின் ஜெயிலர் படத்தை கேரளாவில் பெயர் மாற்றம் செய்து வெளியிட மலையாள ஜெயிலர் குழுவினர் முன்னதாக வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் இந்த விஷயத்தில் சன் பிக்சர்ஸ் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இதனால் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் அந்தப் படம் வெளியாகும் அதே நாளில், மலையாள ஜெயிலர் படமும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஜெயிலர் படங்களும் ஒரே நாளில் ரிலீசாகவுள்ள நிலையில், மலையாள ஜெயிலர் படத்தை ரஜினியின் ஜெயிலர் படம் முறியடித்து சாதனை படைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரஜினியின் படங்களுக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவரது திரைப்படங்களை கொண்டாட்டமாக ரசிகர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜெயிலர் படம் வெளியாகவுள்ளது. மேலும் ரஜினிக்கு கேரளாவிலும் அதிகமாக ரசிகர்கள் உள்ளனர் மேலும் படத்தில் கேரள ரசிகர்களை ஈர்க்கும் கூடுதல் விஷயமாக மோகன்லாலும் படத்தில் உள்ளார். இதனால் ரஜினியின் ஜெயிலர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X