Jailer - எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஜெயிலர் ரிலீஸ் தள்ளிப்போனது.. என்ன நடந்தது?
சென்னை: Jailer Release (ஜெயிலர் ரிலீஸ்) யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் தள்ளிப்போயிருக்கிறது.
அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ஆடியோ வெளியீட்டு விழா: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலைமையில் ரஜினியின் பேச்சு என்னவாக இருக்கும் என்பதை கேட்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். அவர்களது ஆவலை பொய்யாக்காத வகையில்தான் ரஜினியின் பேச்சும் அமைந்திருந்தது. அந்த விழாவில் பேசிய ரஜினி, காக்கா, கழுகு கதையை சொன்னார். மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று பல வருடங்கள் முன்னரே சொன்னதாகவும் தெரிவித்தார்.
காக்கா, கழுகு: ஜெயிலர் ஆடியோ லான்ச்சில் ரஜினியின் பேச்சை கேட்ட பலரும் காக்கா என்று விஜய்யைத்தான் ரஜினி சொல்கிறார். ஏற்கனவே புகைந்து கொண்டிருந்ததில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்துவிட்டார் என்றும் ஒருதரப்பினர் கூறினர். அதேபோல் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிக்கு விஜய் குட்டி கதை மூலம் பதிலடி கொடுப்பார் என்றும் விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்தனர். ஆனால் பட ரிலீஸ் நெருங்க நெருங்க ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்குமான சண்டை கொஞ்சம் குறைந்திருக்கிறது.
ஜெயிலருக்கு சிக்கல்: இந்தச் சூழலில் மலையாளத்திலும் ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் ரிலீஸாகவிருக்கிறது. அதனை சக்கீர் மடத்தில் என்பவர் இயக்க என்.கே.மொகம்மது தயாரித்திருக்கிறார். தயான் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மலையாள ஜெயிலரும் தமிழ் ஜெயிலர் ரிலீஸாகும் ஆகஸ்ட் பத்தாம் தேதி ரிலீஸாகும் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

மடத்தில் வைத்த கோரிக்கை: அதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சக்கீர் மடத்தில், ஜெயிலர் என்ற பெயரில் இரண்டு படங்களும் ரிலீஸானால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே தமிழ் ஜெயிலரின் பெயரை படக்குழு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். மேலும் இதுதொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் பெயரை மாற்றுவதற்கு அந்த நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
புதிய முடிவு: இந்நிலையில் மலையாள ஜெயிலர் படக்குழு புதிய முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி படத்தை ஆகஸ்ட் 18ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது. எவ்வளவு முயன்றும் தமிழ் ஜெயிலர் விட்டுக்கொடுக்கவில்லை. எனவே அதனுடன் போட்டி போட்டால் போட்ட முதலுக்கு மோசம் வந்துவிடும் என்றுதான் இந்த முடிவை மலையாள ஜெயிலர் குழு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











