ஹிந்தியில் ரீமேக்காகும் " அஞ்சாம் பாதிரா“..ரசிகர்கள் குஷி!

கொச்சி : மலையாளத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் இன்று வரை பலரையும் பிரமிக்க வைத்தும், அதில் ஒரு சில திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது.

Recommended Video

இந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றி அடைந்து வசூல் சாதனை புரிந்தது.

இவ்வாறு மலையாள திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளியான " அஞ்சாம் பாதிரா" என்ற கிரைம் திரில்லர் திரைப்படம் இப்பொழுது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தரமான திரைப்படங்கள்

தரமான திரைப்படங்கள்

பிரம்மாண்ட பொருட் செலவுகள் எல்லாம் இல்லாமல் மிக சாதாரணமாக எதார்த்தமான கதைகளைக் கொண்டு தரமான திரைப்படங்கள் இன்று வரை மலையாளத் திரையுலகில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

பல மொழிகளில் ரீமேக்

பல மொழிகளில் ரீமேக்

அவ்வாறு வெளியாகும் திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்று விருதுகளையும் வென்று வரும் நிலையில் பல திரைப்படங்கள் இன்றளவும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஹிந்தியில் ரீமேக்

ஹிந்தியில் ரீமேக்

இந்நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சூப்பர் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக மலையாளத்தில் வெளியான "அஞ்சாம் பாதிரா" திரைப்படம் இப்பொழுது ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 சூப்பர் கிரைம் த்ரில்லர்

சூப்பர் கிரைம் த்ரில்லர்

இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியிருந்த இந்த திரைப்படம் பார்ப்போர் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் அளவிற்கு பல திருப்புமுனைகள் நிறைந்த மர்ம முடிச்சுகளை கொண்டு சூப்பர் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகியிருந்தது.

படப்பிடிப்பு பணிகள்

படப்பிடிப்பு பணிகள்

குஞ்சகோ போபன் மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்த இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இப்பொழுது இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ஏபி இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்க உள்ள இத்திரைப்படம் லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ள நிலையில் இதில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் தகவல்கள் கூடிய விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: hindi இந்தி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X