Premalu: கோடி வசூலை அள்ளும் பிரேமலு.. தமிழில் ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: ஒருபக்கம் மலையாளத் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் படம் வசூலை அள்ளிவர மறுபக்கம் பிரேமலு மலையாளத் திரைப்படம் தமிழகத்தின் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால், இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

மலையாளத் படங்கள் ஆண்டு தோறும் ஏதோ ஒரு வித்தியாசமான கதையை கொடுத்து தமிழ் ரசிகர்களை மகிழ்விப்பதால், மலையாள திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரேமம், ஹிருதயம், 2018, மின்னல் முரளி, க்ரூப், ஐயப்பனும் கோஷியும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களின் வரிசையில் தற்போது பிரேமலு படமும் இணைந்துள்ளது.

malayalam movie premalu release in tamil

பிரேமலு: இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் மமிதா பைஜு, நஸ்லென் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் பிரேமலு. மலையாள பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த மாதம் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. கல்லூரி காலத்தில் ஏற்படும் பருவ காதல் அதனை சுற்றி நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், இளைஞர்கள் மற்றுமின்றி அனைத்து வயது மக்களிடமும் சென்றடைந்து வெற்றி பெற்றுள்ளது.

வசூலை அள்ளும் பிரேமலு: காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள பிரேமலு படம் தமிழ்நாட்டில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருப்பதால் பாக்ஸில் வசூலை அள்ளி வருகிறது. ஐந்து கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடிக்கு மேல் தாண்டி வசூல் செய்து வருகிறது. பிரேமலு படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பால், எஸ்எஸ் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி படத்தை வெளியிட்டார். இப்படத்தின் தெலுங்கு வர்ஷன் மார்ச் 8 ந் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

malayalam movie premalu release in tamil

தமிழ் டப்பிங்: தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகர்களின் புது படங்கள் இல்லாத காரணத்தினால் இந்த பிரேமலு திரைப்படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது. பிரேமலு படத்தை மார்ச் 15 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டர்களிலும் தமிழ் டப்பிங்கில் களம் இறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இது நம்ம ஊர் மலையாள சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், தமிழில் வெளியாக இருக்கும் சின்ன பட்ஜெட் படங்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X