ஜிமிக்கி கம்மல் பாடல் ஆசிரியர் அனில் பனச்சூரன் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

திருவனந்தபுரம்: ஜிமிக்கி கம்மல் பாடல் ஆசிரியரான அனில் பன்ச்சூரன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 55.

கவிஞர், பாலாசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் அனில் பனச்சூரன், என்டமேடே ஜிமிக்கி கம்மல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள காயம்குளம் பகுதியை பூர்விகமாக கொண்ட இவர், அரபிக்கதா, கத பரயும்போல், வெளிப்படினின்டே புஸ்தகம் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.

ஜிமிக்கி கம்மல்

ஜிமிக்கி கம்மல்

2007ஆம் ஆண்டு வெளியான அரபிக்கதா படத்தின் மூலம் இயக்குநர் லால் ஜோஸ், அனில் பனச்சூரனை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வெளிபடினின்டே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடலின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார் அனில் பனச்சூரன்.

திடீர் உடல்நலக்குறைவு

திடீர் உடல்நலக்குறைவு

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனில் பனச்சூரன், கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து நேற்றிரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அனில் பனச்சூரன்.

குடும்பத்தினர் சந்தேகம்

குடும்பத்தினர் சந்தேகம்

ஆனால் இரவு 8.30 மணியளவில் அவர் திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார்.

இயற்கைக்கு மாறான மரணம்

இயற்கைக்கு மாறான மரணம்

அதன் அடிப்படையில் அனில் பன்ச்சூரனின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

இரங்கல்

இரங்கல்

அனில் பனச்சூரனின் திடீர் மரணம் மலையாள திரைத்துறையை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X