பல பெண்களுடன் தொடர்பு?.. தொடர் சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர் பட நடிகர்.. மனைவியை பிரிவதாக அறிவிப்பு

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக இருக்கும் விநாயகன் தனது மனைவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார்.

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விநாயகன். படத்துக்கு படம் தனது நடிப்பில் வித்தியாசத்தை காட்டும் விநாயகனுக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

மோகன்லால் படத்தில் அறிமுகமான விநாயகன்

மோகன்லால் படத்தில் அறிமுகமான விநாயகன்

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் நடித்த மாந்த்ரீகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் விநாயகன். 1995ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த விநாயகனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக மல்லுவுட்டில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தொடர் சர்ச்சை; மனைவியை பிரிந்தார்

தொடர் சர்ச்சை; மனைவியை பிரிந்தார்

விநாயகன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர். சமீபத்தில்கூட ஒரு பெண் பத்திரிகையாளரை அவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதுமட்டுமின்றி பல பெண்களுடன் அவர் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "எனக்கும் எனது மனைவி பபிதாவுக்கும் இருந்த அனைத்து திருமண உறவுகளும், சட்ட உறவுகளும் முடிவுக்கு வருகின்றன" என குறிப்பிட்டுள்ளார். விநாயகனின் முன்னாள் மனைவி பபிதா வங்கி ஊழியராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறமொழிகளிலும் நடித்த விநாயகன்

பிறமொழிகளிலும் நடித்த விநாயகன்

முன்னதாக, மலையாளத்தில் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் ஹிந்தி மொழியிலும் அறிமுகமானார் விநாயகன். கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான அவர் அடுத்தததாக தெலுங்கு மொழியிலும் நடிக்க ஆரம்பித்தார். 2006ஆம் ஆண்டு வெளியான ஆஷத்யூடு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அங்கும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

தமிழில் கலக்கிய விநாயகன்

தமிழில் கலக்கிய விநாயகன்

மலையாளம், ஹிந்தி, தெலுங்கில் நடித்த விநாயகன் தமிழில் திமிரு படத்தின் மூலம் இண்ட்ரோ ஆனார். விஷால் நடித்த அந்தப் படத்தில் அவரது அண்ணியான ஸ்ரேயா ரெட்டிக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளியாக நடித்த அவர் நடிப்பில் மட்டுமின்றி தனது வசன உச்சரிப்பின் மூலமும் கவனம் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் நடித்துவருகிறார்.

கம்மாட்டி பாடத்தில் மெர்சல் செய்த விநாயகன்

கம்மாட்டி பாடத்தில் மெர்சல் செய்த விநாயகன்


அவரது சினிமா கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று கம்மாட்டி பாடம். 2016ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் கங்காதரன் என்ற கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானின் தோஸ்த்தாக வரும் விநாயகன் ஒவ்வொரு சீனிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது,. மேலும் அந்தப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X