பழம்பெரும் மலையாள நடிகை சுப்பலட்சுமி காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!
திருவனந்தபுரம்: பழம்பெரும் மலையாள நடிகையான சுப்பலட்சுமி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
பாடகரும், இசையமைப்பாளருமான நடிகை சுப்புலட்சுமி, கிட்டத்தட்ட 75 படங்களில் நடித்திருக்கும் சுப்புலட்சுமி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
1936ம் ஆண்டு பிறந்த சுப்பலட்சுமி கல்யாணகிருஷ்ணனை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். இவரது இளைய மகள் தாரா கல்யாணும் பிரபல நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார்.

பழம் பெரும் நடிகை: நடிகை சுப்பலட்சுமி, திரைப்படத்தில் நுழைவதற்கு முன்பு, ஜவஹர் பாலபவனில் இசைக்கலைஞராக பணியாற்றிய இவர், டெலிஃபிலிம்கள் மற்றும் ஆல்பங்களில் நடித்து வந்த இவர். வெளியான நந்தனம் படத்தில் நடித்தார். தொடர்ந்து, கல்யாண ராமன், ராப்பகல், திலகம், சிஐடி மூசா, ராணி பத்மினி பாண்டிப்படா பல வெற்றிப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
பீஸ்ட் படத்தில்: தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தமிழில், பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் அவர். அதே போல இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவர் நடித்துள்ளார்.

உயிரிழந்தார்: கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு 87 வயது. இந்த செய்தியை அவரது பேத்தி சௌபாக்யா வெங்கடேஷ் உறுதிப்படுத்தினார். நான் அவளை இழந்தேன். 30 ஆண்டுகள் என் வலிமை மற்றும் அன்பு. என் அம்மாம்மா, என் சுப்பு, என் குழந்தை. பிரார்த்தனைகளுக்கு நன்றி என்றார். இவரது மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர் திலீப் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











