தயாரிப்பாளர் ரவி மகள் திருமணம்.. சென்னையில் நடந்த ரிசப்ஷன்.. அட இவங்கல்லாம் வந்துருக்காங்களா!
சென்னை: தயாரிப்பாளர் ரவி கொட்டரக்காரா மலையாள படங்களில் மட்டுமில்லாமல் தமிழிலும் படங்களை தயாரித்தவர். பல வெற்றி படங்களை கொடுத்தவர். தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராகவும் இவர் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, இவரது மகள் நிமிஷாவின் திருமணம் மற்றும் ரிசப்ஷன் நடந்துள்ளது.
சிறு வயதிலேயே ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆன நிமிஷாவிற்கு கேரளாவில் பாரம்பரியமுறைப்படி திருமணம் நடந்து முடிந்துள்ளது. மேலும் நேற்றைய தினம் வெட்டிங் ரிசப்ஷனும் சென்னையில் நடந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் எஸ்ஏசி மற்றும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மிகவும் பிரம்மாண்டமாக இந்த வெட்டிங் ரிசப்ஷன் நடத்தப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ரவி கொட்டரக்காரா: மலையாள படங்களின் தயாரிப்பாளர் ரவி மலையாள படங்களில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னட மொழி படங்களையும் தயாரித்துள்ளார். இவரது தயாரிப்பில் 70க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகியுள்ளன. பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. இதில் பல படங்கள் தேசிய விருதுகளையும் பன்னாட்டு விருதுகளையும் பெற்றுள்ளன. கணேஷ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை பல ஆண்டுகளாக இவர் நடத்தி வருகிறார். இவரது மகள் நிமிஷா சிறு வயதிலேயே ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆன நிலையில், அங்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.
ரவி மகள் திருமணம்: இந்நிலையில் இவருக்கும் விஷ்ணு என்பவருக்கும் கேரளாவின் குருவாயூரில் உள்ள கோயிலில் திருமணம் நடந்துள்ளது. சொந்தங்கள், நண்பர்கள் சூழ இந்த திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் மம்முட்டி தனது மனைவியுடன் பங்கேறு மணமக்களை வாழ்த்தியுள்ளார். கேரளாவில் பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் மம்முட்டி மட்டுமில்லாமல் மேலும் பல திரையுலக பிரபலங்களும் கலந்துக் கெண்டனர். இதையடுத்து சென்னையில் இவர்களின் வெட்டிங் ரிஷப்ஷன் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் பல முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
சென்னையில் ரிஷப்ஷன்: சென்னையின் பிரபல ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த ரிஷப்ஷன் நடந்துள்ளது. இதில் கோலிவுட்டின் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த விழாவின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக அனைவரையும் கவர்ந்திருந்தார். இதையடுத்து விஜய்யின் அப்பா எஸ்ஏசி மற்றும் அம்மா ஷோபா சந்திரசேகரும் நடிகர் சிவகுமாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தினர். மலையாள நடிகர்கள் ஜெயராம், காவ்யா உள்ளிட்டவர்களும் நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர்.
பழமையான தயாரிப்பு நிறுவனம்: ஆஸ்திரேலியாவில் உணவு அதிகாரியாக செயல்பட்டுவரும் நிமிஷா, பிசினசையும் நடத்தி வருகிறார். இதேபோல ரவி, கணேஷ் பிக்சர்சை மட்டுமில்லாமல் கொட்டாக்கரா என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மிகவும் பழமையான தயாரிப்பு நிறுவனமான இவரது நிறுவனங்கள் அறியப்படுகின்றன. பாசமலர் படத்தை பார்த்து இம்ப்ரஸ் ஆகி தன்னுடைய அப்பாவின் தயாரிப்பு நிறுவனத்தில் ரவி இணைந்ததுடன், எடிட்டிங், இயக்கம் உள்ளிட்டவற்றையும் கற்று தேர்ந்துள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளாக தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications