»   »  நிர்வாணமாக சுற்றி, பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிரபல திரைக்கதை எழுத்தாளருக்கு சிறை

நிர்வாணமாக சுற்றி, பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிரபல திரைக்கதை எழுத்தாளருக்கு சிறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நிர்வாணமாக வந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மலையாள திரைக்கதை எழுத்தாளர் ஹஷிர் முகமதுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

என்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் பணியாற்றியவர் கேரளாவை சேர்ந்த ஹஷிர் முகமது. பின்னர் அவர் மலையாள திரையுலகிற்கு வந்து திரைக்கதை எழுத்தாளர் ஆனார்.

அஞ்சு சுந்தரிகள் படம் மூலம் அவர் திரைக்கதை எழுத்தாளர் ஆனார்.

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த நீலாகாஷம் பச்சக்கடல் சுவன்ன பூமி படத்திற்கும் ஹஷிர் திரைக்கதை எழுதினார். அவர் திரைக்கதை எழுதிய இரண்டு படங்களுமே ஹிட்.

கொச்சி

கொச்சி

ஹஷிர் முகமது கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொச்சியில் உள்ள தனது அபார்ட்மென்ட் வளாகத்தில் நிர்வாணமாக சுற்றினார். அப்போது அந்த அங்கு வந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

போலீஸ்

போலீஸ்

அந்த பெண் அலற குடியிருப்பில் இருந்தவர்கள் ஓடிவந்து ஹஷிர் முகமதை கட்டிவைத்து போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் வீட்டை சோதனை செய்ததில் கஞ்சா கிடைத்தது. போதையில் தான் அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது.

தண்டனை

தண்டனை

இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் ஹஷிர் முகமதுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

English summary
Ernakulam court has sentenced malayalam script writer Hashir Mohamed three years imprisonment for roaming naked in the apartment building and misbehaved with a woman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil