போன் பேசக்கூட அனுமதியில்லை.. முதல் திருமண வாழ்க்கை குறித்து மனம் வெதும்பிய கிறிஸ் வேணுகோபால்!
சென்னை: மலையாள சீரியல் நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதரின் திருமணம்தான் கடந்த வாரத்தில் ஹாட் டாபிக். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். கடந்த அக்டோபர் 30ம் தேதி இவர்கள் இருவரும் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துக் கொண்டனர். பத்தரைமாற்று என்ற படத்தில் தாத்தாவாக நடித்துள்ள கிறிஸ் வேணுகோபால் இளம்வயது பெண்ணை திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் திவ்யா ஸ்ரீதர் அடுத்தடுத்து பேசி வருகிறார். தனக்கு 40 வயது என்றும் கிறிஸ் வேணுகோபாலுக்கு 49 வயது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சில அந்தரங்க விவகாரங்களை வைத்தும் இவர்களது திருமணம் விமர்சிக்கப்பட்ட நிலையில் செக்ஸ் மட்டுமே வாழ்க்கையா என்றும் திவ்யா ஸ்ரீதர் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடிகர் கிறிஸ் வேணுகோபால்: மலையாள டிவி சீரியல் நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் கடந்த அக்டோபர் 30ம் தேதி குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றது. நீண்ட தாடி மற்றும் முடியில்லாத தலையுடன் இருக்கும் கிறிஸ் வேணுகோபால் பத்தரைமாற்று என்ற படத்தில் தாத்தாவாக நடித்த நிலையில் அவருக்கு இந்த வயதில் இந்த திருமணம் அவசியமா என்ற கேள்விகள் எழுப்பின. சில அந்தரங்க விஷயங்களை வைத்தும் இவர்களது திருமணம் விமர்சிக்கப்பட்டது.
திவ்யா ஸ்ரீதர் விளக்கம்: இதையடுத்து அடுத்தடுத்து பேசிவரும் திவ்யா ஸ்ரீதர் தனக்கு 40 வயதாவதாகவும் கிறிஸ் வேணுகோபாலுக்கு 49 வயதாவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் செக்ஸ் மட்டுமே வாழ்க்கையில்லை என்றும் அவர் வெளிப்படையாகவே பேசினார். இவருக்கும் கிறிஸ் வேணுகோபாலை போலவே இது இரண்டாவது திருமணம். இவருக்கு முதல் திருமண வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகள் முன்னிலையில் இவர் செய்துக் கொண்ட இந்த இரண்டாவது திருமணம் தொடர்ந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே, தன்னுடைய முதல் மனைவியை ஏமாற்றி கிறிஸ் இந்த திருமணத்தை செய்துக் கொண்டதாகவும் சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.
முதல் திருமண வாழ்க்கை குறித்து கிறிஸ்: இதனிடையே, இந்த விஷயம் குறித்து தற்போது கிறிஸ் வேணுகோபால் மனம் திறந்து பேசியுள்ளார். சுதந்திரம் இல்லாத திருமணத்தால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக கிறிஸ் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார். அதிலிருந்து வெளியே வந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகே தற்போது திவ்யா ஸ்ரீதரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய குடும்பத்தினருடன் பேசக் கூடாது, வீட்டிற்கு யாரும் வரக்கூடாது, போன் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பு பிராணியை போன்றே தான் தன்னுடைய முதல் திருமண வாழ்க்கையில் வாழ்ந்ததாகவும் கிறிஸ் தெரிவித்துள்ளார்.
மனம் வெதும்பிய கிறிஸ் வேணுகோபால்: இதனால் தொடர்ந்து வருத்தத்திற்கு உள்ளாகி கடந்த 2018ம் ஆண்டில் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறி, 2019ம் ஆண்டில் விவாகரத்திற்கு அப்ளை செய்ததாகவும் 2022ம் ஆண்டில்தான் விவாகரத்து கிடைத்ததாகவும் கிறிஸ் கூறியுள்ளார். இதையடுத்து பல மாதங்கள் கழித்தே தனக்கு ஒரு துணையின் அவசியத்தை உணர்ந்து திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்துக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திருமணம் குறித்து பலரும் தவறான வீடியோக்களை வெளியிட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











